Home அரசியல் நடிகர்கள் பின்னால் சென்று கீழே விழாதீர்கள்: விஜய் மீது ரஜினி மறைமுக தாக்கு  – Kumudam

நடிகர்கள் பின்னால் சென்று கீழே விழாதீர்கள்: விஜய் மீது ரஜினி மறைமுக தாக்கு  – Kumudam

0


ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் ஜெயிலர் 2  படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஹைதராபாத் சென்றிருந்த ரஜினி தற்போது சென்னை திரும்பினார் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது கூறியாவது, கமலுடன் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கவிருக்கிறது, 

ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் இரண்டு நாட்கள் உள்ளது படம் வெளியிடக்கூடிய தேதியை தயாரிப்பு நிறுவனமே முடிவு செய்யும் என கூறினார்.  ஜனநாயகன் திரைப்படம் குறித்த கேள்விக்கு, நான் கருத்து சொல்ல விரும்பவில்லை என ரஜினி தெரிவித்தார் இதை தொடர்ந்து பேசிய ரஜினி,  இளைஞர்கள் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் அவர்களுக்கு ஏதாவது அடிபட்டால் அவர்களுக்கு தானே காயம் ஆகும். படிக்கிற வயதில் முதலில் படிப்பில் தான் கவனம் செலுத்த வேண்டும் அந்த நேரத்தை விட்டால் அவர்கள் வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட வேண்டிய நிலை ஏற்படும்.

 படிப்பில் மட்டும் தான் அவர்களுடைய சிந்தனை செயல் இருக்க வேண்டும்.  முதலில் உடல்நிலை மற்றும் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் இளைஞர்களுக்கு நான் கொடுக்கக்கூடிய அறிவுரை என்னவென்றால் முதலில் குடிப்பழக்கம் கஞ்சா உள்ளிட்டதற்கு அடிமையாகி விடக்கூடாது அது சென்றால் அவருடைய வாழ்க்கையை கெட்டுப் போய்விடும்.நீங்கள் மட்டுமல்லாமல் உங்களை சம்பந்தபட்ட தாய் தந்தை மற்றும் அனைவரின் வாழ்க்கையும் நரகமாக்கி விடும் தமிழ்நாடு.  அப்படிப்பட்ட நண்பர்களின் நீங்கள் அருகில் கூட சென்று விடாதீர்கள் என கூறி விட்டுச் சென்றார். இவ்வாறு அவர் கூறினார் 

தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செல்லும் போது இளைஞர்கள் அவரை பின் தொடர்ந்து சென்று பலர் காயம் அடைக்கின்றனர். இதனையே ரஜினி மறைமுகமாக குறிப்பிட்டு தாக்கி பேசியிருப்பது விஜய் ரசிகர்களை கொந்தளிக்க செய்துள்ளது. 



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version