back to top
16.6 C
London
Friday, June 19, 2026
No menu items!
Homeஅரசியல்தலைவர் பதவியிலிருந்து செல்வபெருந்தகைக்கு விரைவில் கல்தா? - Kumudam

தலைவர் பதவியிலிருந்து செல்வபெருந்தகைக்கு விரைவில் கல்தா? – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



தமிழக காங், தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில், நேற்று முன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து, ‘சீருடை இல்லாமல் வருமான வரித்துறையினர் என, சொல்லிக் கொண்டு, ஹிந்தி பேசும் நபர்கள், தன் வீட்டில் சோதனை நடத்தியதாகவும், ராகுல் பிரசாரத்திற்கு செல்ல முடியாத வகையில் தடுக்கப்பட்டதாகவும் செல்வப்பெருந்தகை குற்றஞ் சாட்டி இருந்தார்.

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர், முதல்வர் ஸ்டாலின் ஆகியோரும் செல்வபெருந்தகை வீட்டில் வருமான வரித்துறை சோதனைக்கு  கண்டனம் தெரிவித்து இருந்தனர். ஆனால், செல்வப்பெருந்தகை கூறியது போல், அவரது வீட்டில் சோதனை எதுவும் நடத்தவில்லை’ என, வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

அதுமட்டுமின்றி, செல்வப்பெருந்தகை மீது நடவடிக்கை எடுக்க, போலீஸ் கமிஷனரிடம் வருமான வரித்துறை தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கவும், வருமான வரித்துறை வலியுறுத்தி உள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக  கே.சி.வேணுகோபால், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர், கே.எஸ்.அழகிரி ஆகியோரிடம், யார் சொல்வது உண்மை என விசாரித்துள்ளார். 

அவர்கள் இருவரும் தெரிவித்த கருத்துகளை, ராகுலின் கவனத்திற்கு  வேணுகோபால் தெரிவித்துள்ளார். செல்வப்பெருந்தகை செயலால், ஏற்கனவே திமுக உடன் கூட்டணிக்கு ராகுலுக்கு செல்வபெருந்தகை கடும் நெருக்கடி அளித்து இருந்தார். இதனால் ஏற்கனவே செல்வபெருந்தகை மீது ராகுல் கடும் அதிருப்தியில் உள்ளார். தற்போது வருமானவரித்துறை ரெய்டு விஷயத்தில் ராகுல் ‘கடும் அப்செட்’ ஆகி உள்ளார். 

இதன் காரணமாக செல்வபெருந்தகை விரைவில் கல்தா கொடுக்க டெல்லி காங்கிரசு தயாராகி விட்டதாக தெரிகிறது. சட்டசபை தேர்தல் முடிந்ததும், தலைவர் பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என, செல்வப்பெருந்தகை ஏற்கனவே கூறியுருந்தது குறிப்பிடத்தக்கது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here