back to top
22.7 C
London
Monday, September 21, 2026
No menu items!
Homeஅரசியல்GEM கிரானைட் வீரமணி கைது ! ஸ்டாலினை நோக்கி அனல்பறக்கும் கேள்விகள் ! - Kumudam

GEM கிரானைட் வீரமணி கைது ! ஸ்டாலினை நோக்கி அனல்பறக்கும் கேள்விகள் ! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணி மீதான போக்சோ வழக்கு தற்போது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்திலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி தொடர்பான பாலியல் குற்றச்சாட்டில் வீரமணி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த காலத்தில் இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன.

இந்த நிலையில், திமுக ஆட்சிக்காலத்தில் காவல்துறை மு.க.ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் இருந்தபோதும், வீரமணி மீது உரிய நேரத்தில் கைது நடவடிக்கை ஏன் எடுக்கப்படவில்லை என அமைச்சர் நிர்மல்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக ஆட்சியில் வீரமணி தப்பியது எப்படி?

அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாக வெளியான தகவலின்படி, வீரமணி மீது சிறுமிகளை பாலியல் குற்றங்களுக்கு உட்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருந்த காலகட்டத்தில் காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்தது என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக, வீரமணிக்கு எதிரான ஆதாரங்கள் இருந்ததாக கூறப்படும் நிலையில், அவர் ஏன் அப்போது கைது செய்யப்படவில்லை என்பதே முக்கிய கேள்வி என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

“யார் சொல்லி கைது நடவடிக்கை எடுக்கவில்லை?”

பாதிக்கப்பட்ட சிறுமிகள் தொடர்பான வீடியோ ஆதாரங்கள் காவல்துறையிடம் இருந்ததாக கூறப்படும் நிலையில், அவற்றின் அடிப்படையில் உடனடியாக ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என நிர்மல்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், யாருடைய தலையீட்டின் காரணமாக வீரமணி மீது கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

“ஸ்டாலினுக்கு வீரமணி நன்கு தெரிந்தவர்” :

வீரமணி, மு.க.ஸ்டாலினுக்கு நன்கு தெரிந்த நபர் என்றும், இதன் காரணமாகவே கடந்த திமுக ஆட்சியில் அவருக்கு எதிரான நடவடிக்கை தாமதமானதா என்ற கேள்விக்கும் ஸ்டாலின் பதில் அளிக்க வேண்டும் என்றும் நிர்மல்குமார் கூறியுள்ளார்.

வழக்கு பதிவு முதல் கைது வரை நடந்தது என்ன?

கடந்த 2025-ம் ஆண்டு அக்டோபர் மாதம், வீரமணி சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வீடியோ அடங்கிய பென்டிரைவ் ஒன்று காவல்துறையிடம் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் சிறுமியை அடையாளம் காண முடியவில்லை உள்ளிட்ட காரணங்களால் விசாரணை முடிவுக்கு கொண்டு வர முயற்சி செய்யப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், சிறப்பு போக்சோ நீதிமன்றம் அந்த முடிவை ஏற்க மறுத்து கூடுதல் விசாரணைக்கு உத்தரவிட்டதாகவும், அதன் பின்னர் வழக்கு மீண்டும் தீவிரமாக விசாரிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

பாதிக்கப்பட்ட சிறுமி அடையாளம் காணப்பட்டது :

வழக்கின் முக்கிய திருப்பமாக, வீடியோவில் இடம்பெற்றதாக கூறப்படும் சிறுமியை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதுடன், அந்த வாக்குமூலம் நீதித்துறை நடுவர் முன்பும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டியுள்ளனர்.

மேலும், இந்த வழக்கில் வேறு சில பெண்கள் மற்றும் சிறுமிகளிடமிருந்தும் தகவல்கள் பெறப்பட்டுள்ளதாகவும், விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. 

வீரமணி உள்ளிட்டோர் கைது :

இந்த வழக்கில் ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணி மற்றும் அவருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சாந்தி, மகேந்திர சிம்கன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மூவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வீரமணியிடம் நீதிமன்ற அனுமதியுடன் காவலில் வைத்து விசாரணை நடத்தப்பட்டதாகவும், வழக்கில் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கூடுதல் ஆதாரங்கள் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தற்போதைய நிலையில் விஜய் அரசு அதிரடி :

இந்த நிலையில், வீரமணி மீதான பாலியல் வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை நடத்தி, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை காவல் ஆணையருடன் வழக்கு தொடர்பாக ஆலோசனையும் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், தற்போது வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்துள்ளது.

அரசியல் ரீதியாகவும் எழும் முக்கிய கேள்வி :

வீரமணி மீதான வழக்கு தற்போது விசாரணையில் இருக்கும் நிலையில், கடந்த காலத்தில் காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்த கேள்விகள் அரசியல் ரீதியாக முன்வைக்கப்படுகின்றன.

“திமுக ஆட்சியில் முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருந்தபோது, வீரமணி மீது ஏன் கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை?”, “ஆதாரங்கள் இருந்ததாக கூறப்படும் நிலையில் விசாரணை ஏன் தாமதமானது?”, “வழக்கை முடிக்க முயற்சி செய்தது ஏன்?” என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு அப்போதைய அரசின் விளக்கம் என்ன என்று சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் கேள்வி எழுப்பியுள்ளது என்பது தற்போது விவாதப் பொருளாகியுள்ளது.

இந்த கேள்விகளை முன்வைத்துள்ள அமைச்சர் நிர்மல்குமார், வீரமணி தொடர்பான கடந்தகால நடவடிக்கைகள் குறித்து மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, வீரமணி மீதான வழக்கில் தற்போது நடைபெற்று வரும் போலீஸ் விசாரணையின் முடிவுகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் அடுத்தகட்ட முக்கியத்துவம் பெற்றுள்ளன.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here