Home அரசியல் சூறாவளி தேர்தல் பிரசாரத்திற்கு பிறகு ஓய்வு: ஸ்டாலின் கொடைக்கானல், உதயநிதி துபாய் – Kumudam

சூறாவளி தேர்தல் பிரசாரத்திற்கு பிறகு ஓய்வு: ஸ்டாலின் கொடைக்கானல், உதயநிதி துபாய் – Kumudam

0



தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 85.15 சதவிகித வாக்குகள் பதிவாகின. தமிழக தேர்தல் வரலாற்றில், இதுவரை இல்லாத சாதனையாக இந்த வாக்குப் பதிவு அமைந்தது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

வெய்யிலின் தாக்கம் சென்னையில் அதிகம் உள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு நாளை(ஏப். 25) செல்ல உள்ளதாகத் தகவல் தெரிவந்துள்ளது. கடந்த 2019, 2024 மக்களவைத் தேர்தல்கள், கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்தவுடன் கொடைக்கானல் செல்வதை முதல்வர் ஸ்டாலின் வழக்கமாக கொண்டுள்ளார்.இதனைத் தொடர்ந்து, 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நேற்று முடிவடைந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினருடன் நாளை கொடைக்கானல் செல்ல உள்ளார்.

இந்த நிலையில்,  இன்று காலை உதயநிதி ஸ்டாலின் தனது மனைவியுடன் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்தார். சுமார் ஒரு மாத காலத்திற்கும் மேலாகத் தொடர்ச்சியான அரசியல் பணிகளில் இருந்த உதயநிதி துபாய் சில நாட்கள் ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளார். விமான நிலையத்தில் அவர் தனது குடும்பத்துடன் இருக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version