Home அரசியல் மடப்புரம் காளி கோயில் ரகசியம்…மாஜிக்களுக்கு தவெக செக் ! – Kumudam

மடப்புரம் காளி கோயில் ரகசியம்…மாஜிக்களுக்கு தவெக செக் ! – Kumudam

0


மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் தற்காலிக காவலாளி அஜித்குமார், நிகிதா என்பவரின் நகையை திருடியதான புகாரில் காவல்துறையினரால் சித்ரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அந்த விவகாரத்தில், ‘அஜித்குமார் எந்த நகையையும் திருடவில்லை. அங்கு திருட்டே நடக்கவில்லை’ என்று சி.பி.ஐ. விசாரணையை முடித்துவைத்தது.

இதையடுத்து, நடக்கவில்லை என்றால், எதற்காக போலீஸார் இவ்வளவு கொடூரமாக தாக்கி அவரை கொன்றனர்? என்கிற கேள்வி விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதையும் த.வெ.க. அரசு தோண்டி எடுக்கிறது. ‘நகைத்திருட்டே அதாவது, 2025 ல் எதிர்க்கட்சியின் விஞ்ஞானி மாஜி ஒருவர், ஓர் இடத்தில் மறைத்து வைத்திருந்த பல ஸ்வீட் பாக்ஸ்களை மர்ம நபர்களிடம் பறிகொடுத்திருந்தார்.

இதையறிந்த ஆளும்கட்சி மாஜி ஜெர்க் ஆனார். காரணம், அப்போது அவரிடம் தேர்தல் செலவுக்காக பல ஸ்வீட் பாக்ஸ்கள் இருந்திருக்கின்றன. அவற்றை கைவசம் வைத்திருந்தால், மத்திய அமைப்புகளால் சிக்கல் ஏற்படுமோ என்றும், வெளியில் கொடுத்துவைத்தால் விஞ்ஞானி மாஜியின் நிலைமை ஆகிவிடுமோ எனவும் யோசித்து, இன்னொரு மாஜியை அணுகியிருக்கிறார். 

அதன்படி ஸ்வீட் பாக்ஸுகளை பதுக்க, மடப்புரம் கோயில் தொடர்புடைய இடம் தேர்வாகியிருக்கிறது எனவும், இது தொடர்பான முக்கிய தகவல் ஒன்று கோயில் காவலாளி அஜித்குமாருக்கு தெரியவந்துதான் ஒன்றுமே இல்லாத நிகிதாவின் திருட்டு புகாரை பயன்படுத்திக்கொண்டு, அவரை காக்கிகள் மூலம் கொன்றிருக்கிறார்கள் எனவும் சொல்லப்படுகிறது. 

விவகாரம் பெரிதாக வெடிக்கவே, கழக ஒன்றியச் செயலாளர் ஒருவர் அஜித்குமார் உறவினர்களிடம் டீல் பேசியதெல்லாம் நடந்தது என்றும் சொல்லப்படுகிறது. இவற்றையெல்லாம் தோண்டி மறுவிசாரணை செய்து சம்பந்தப்பட்ட மாஜிக்களை தூங்கவிடாமல் செய்யும் வேலைகள் வேகமெடுத்திருக்கின்றன.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version