back to top
17.7 C
London
Thursday, June 18, 2026
No menu items!
Homeஅரசியல்யார் ஆட்சிக்கு வருவார்கள்? குழுப்பும் தேர்தல் "EXIT POLL" : ரிசல்ட்டை ஏற்க மறுக்கும் கட்சிகள்  ...

யார் ஆட்சிக்கு வருவார்கள்? குழுப்பும் தேர்தல் “EXIT POLL” : ரிசல்ட்டை ஏற்க மறுக்கும் கட்சிகள்   – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்து இருக்கிறது. ஏப்ரல் 23-ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்த நிலையில், மே. வங்கத்தில் நேற்றைய தினம் கடைசி மாநிலமாக தேர்தல் வாக்குபதிவு நடந்து முடிந்துள்ளது. இதில் பதிவாகும் வாக்குள் மே 4-ம் தேதி திங்கட்கிழமை எண்ணப்பட உள்ளன. 

தேர்தலை முந்தைய கருத்துக்கணிப்பு திமுக, அதிமுக கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவியது. தவெக பெறும் வாக்குளே இருகட்சிகளும் இடையே இழுபறி நீடிப்பதாக பெருபான்மையான கருத்துக்கணிப்புகள் சொல்லப்பட்டன. இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கு தேர்தல் ஆணையம் ஏப் 29-ம் மாலை 6.30 வரை தடை விதித்து இருந்தது. 

மேற்கு வங்காளத்தில் நேற்று 2-வது கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், தேர்தலுக்கு  பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் 5 மாநிலங்களுக்கும் வெளியாகின.இதில்  கருத்து கணிப்பு முடிவுகள் வெவ்வேறாக இருந்தன. என்.டி.டி.வி. – பீப்பிள்ஸ் பல்ஸ், மேட்ரிஸ், ரிபபிளிக் பி மார்க், சாணக்கியா ஸ்ட்ராட்டஜிஸ், மும்பை சட்டபஜார், அக்னி, மின்னம்பலம் ஆகிய 7 நிறுவனங்கள், ஆளுங்கட்சியான தி.மு.க.வே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளன.

ஆனால், வோட் வைப், ஜே.வி.சி. டைம்ஸ் நவ், சி.என்.என். நியூஸ் 18 ஆகிய 3 நிறுவனங்கள் அ.தி.மு.க. ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்துள்ளன. அதே நேரம் , இந்தியா டுடே ஆக்சிஸ் மை இந்தியா தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை பிடிக்கும் என்று கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது. இப்படி, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெவ்வேறாக இருப்பதால், “ஆட்சியை பிடிப்போம்” என்ற நம்பிக்கையில் உள்ள அரசியல் தலைவர்கள் இந்த முடிவுகளை ஏற்க மறுத்துள்ளனர். 

கருத்துகணிப்புகளை முறியடிப்போம்: அதிமுக தலைமை

எதிரான கருத்து திணிப்புகளை முறியடித்து, உண்மையான கணிப்புகளைக் கடந்தும் மகத்தான வெற்றிகளைப் பதிவு செய்வதே அதிமுகவின் வரலாறு என்று அக்கட்சித் தலைமை தெரிவித்துள்ளது. 2011 மற்றும் 2016-ஆம் ஆண்டு நிகழ்ந்த வரலாற்று வெற்றிகளைப் போல, தற்போதைய சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளையும் பொய்யாக்கி மீண்டும் சாதனை படைப்போம் என அதிமுக நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

விசில் புரட்சி ஏற்படும்: செங்கோட்டையன் நம்பிக்கை 

கோவை விமான நிலையத்தில் த.வெ.க. மூத்த தலைவர் செங்கோட்டையன் செய்தியாளர்களை கூறுகையில்:  மக்கள் தீர்ப்பு வேறு, கருத்து கணிப்பு வேறு. மக்கள் மனநிலை புரியாமல் கருத்து கணிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக நான் கருதுகிறேன்.எப்போதுமே கருத்து கணிப்பு பொறுத்தவரையில் தலைவர், அம்மா காலத்தில் இருந்தே கருத்து கணிப்பிற்கும் வெற்றிக்கும் மாறுதலாக தான் இருந்துக்கிறது. இதே நிலைதான் இப்போது நிலவப்போகிறது. பசுமை புரட்சி, வெண்மை புரட்சி, இன புரட்சியை போல விசில் புரட்சி உலக அளவில் தெரியபோகிறது. 200 இடங்களில் த.வெ.க. வெற்றி பெறும். விஜய் தான் தமிழ்நாட்டை ஆள்வார். அவர் தான் நிரந்தர முதல்வர். இது மக்களால் தீர்மானிக்கப்பட்ட ஒன்று. என்றார் 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here