Home அரசியல் தவெகவினர் எந்த டெண்டரும் எடுக்கக்கூடாது: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா  – Kumudam

தவெகவினர் எந்த டெண்டரும் எடுக்கக்கூடாது: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா  – Kumudam

0



சென்னை வில்லிவாக்கம் தொகுதிக்கு உட்பட்ட குடிநீர், சுகாதாரம், வருவாய் மற்றும் பொதுப்பணி உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள், அதிகாரிகளுடனும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஷெனாய் நகர் மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.அதன்பின் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, “ஒவ்வொரு உறுப்பினர்களும் தொகுதி பிரச்னைகளை அதிகாரிகளை சந்தித்து ஆய்வுக் கூட்டம் நடத்த முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் வில்லிவாக்கத்தில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளுடனும் அரசு ஊழியர்களுடன் நடைபெற்றது.

அதன்படி மூன்று வகையாக பிரச்னைகளை பிரித்துள்ளோம். போதைப் பழக்கம் அதிகமாகிவிட்டது என பிரச்சாரத்தின்போது என்னிடம் பெண்கள் சொன்னார்கள். 11 மதுக்கடையில் 6 கடைகளை போர் கால அடிப்படையில் மூட சொல்லியுள்ளோம்.  பெண்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுக்க சொல்லியுள்ளோம். எந்த காவல் நிலையத்தில் யார் புகார் கொடுத்தாலும் வீடியோவாக பதிவு செய்ய கூறியுள்ளோம்

அப்படி செய்தால் இருதரப்பிலும் பிரச்சனை இல்லை. காவல் நிலையங்களில் 24 மணி நேரமும் சிசிடிவி இயங்க வேண்டும் என்று கூறியுள்ளோம். மின் துண்டிப்பு செய்யவதாக இருந்தால் மக்களுக்கு தகவல் கொடுத்த பிறகுதான் மின் துண்டிப்பு செய்ய வேண்டும். மழை நீர் வடிகால் பணிகளை செப்டம்பர் மாதத்திற்குள் செய்து முடிக்க வேண்டும். இந்த தொகுதியில் கல்லூரி திறப்பிற்கு நிலம் அடையாளம் காண கூறியுள்ளோம்.

தவெக சார்பாகவோ, கட்சி பேர் சொல்லியோ, என் பெயர் சொல்லியோ அலுவலகங்களில் ஒப்பந்தங்களில் ஊழல் ஈடுபடக்கூடாது. முன்பு 43 கமிஷன் இருந்தது. அது இப்போது 0 கமிஷன் என கூறியுள்ளேன். பெண்கள் பாதுகாப்பு, கஞ்சா புழக்கத்தை தடுப்பது, காவல்துறைக்கு முழு அதிகாரம் கொடுத்துள்ளோம்.” என பேசினார்.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version