Home தமிழ்நாடு பெரும்பான்மை நிரூபிப்பு: நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி! – Kumudam

பெரும்பான்மை நிரூபிப்பு: நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி! – Kumudam

0



தமிழகச் சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு வெற்றி பெற்றுத் தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளது.

தமிழக முதல்வராகப் பதவியேற்ற விஜய், ஆளுநரின் உத்தரவுப்படி இன்று சட்டமன்றத்தில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். 107 இடங்களை வைத்திருந்த தவெக-விற்கு, காங்கிரஸ், விசிக, இடதுசாரி கட்சிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை ஆதரவு தெரிவித்தன. மேலும், எஸ்.பி. வேலுமணி தலைமையிலான அதிமுகவினர் 25 பேர் தவெக அரசுக்கு ஆதரவு அளித்துள்ளனர். காரசாரமான விவாதங்களுக்குப் பிறகு நடைபெற்ற வாக்கெடுப்பில், தவெக அரசுக்கு ஆதரவாக 144 வாக்குகள் கிடைத்தன. இதன் மூலம் தவெக அரசு தனது பெரும்பான்மையை உறுதி செய்தது.

வாக்கெடுப்பின் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான திமுக உறுப்பினர்கள், அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்து அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். மறுபுறம், தேமுதிக மற்றும் மஜக ஆகிய கட்சிகள் அரசுக்கு எதிராக 22 வாக்குகளைப் பதிவு செய்தன. பாமக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 5 உறுப்பினர்கள் எந்தத் தரப்பிற்கும் ஆதரவு அளிக்காமல் நடுநிலை வகித்தனர்.

தவெக அரசுக்கு ஆதரவாகக் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேஷ் குமார், விசிக வன்னியரசு, இடதுசாரி தலைவர்கள் மற்றும் மன்னார்குடி எம்.எல்.ஏ. ஆகியோர் உரையாற்றினர். இறுதியாகச் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், தவெக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version