back to top
20.6 C
London
Saturday, September 19, 2026
No menu items!
Homeதமிழ்நாடுதட்டுப்பாடு அச்சம் : நீண்ட வரிசையில் நிற்கும் டூவீலர், கார்கள்: பெட்ரோல், டீசல் காலி பங்குகள்...

தட்டுப்பாடு அச்சம் : நீண்ட வரிசையில் நிற்கும் டூவீலர், கார்கள்: பெட்ரோல், டீசல் காலி பங்குகள் மூடல் – Kumudam

Date:

Related stories

மீம்ஸ், ரீல்ஸ்களில் கலக்கும் ‘அடியே காந்தா..!’ நாலு ஜெனரேஷன் கடந்தும் டிரெண்டிங்!

72 ஆண்டுகளைக் கடந்தும் எம்.ஆர்.ராதாவின் நடிப்பும், ‘அடியே காந்தா’ வசனமும்...

“வி.எஸ். பாபு கவலைக்கிடம்?” மருத்துவமனை அறிக்கை சொல்லப் போவது என்ன? – Kumudam

சென்னை கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில்...
spot_imgspot_img



முன்எச்சரிக்கையாக பெட்ரோல், டீசலை பெரிய கேன், பாட்டில்களில் வாகன ஓட்டிகள் வாங்கி சென்றனர். ஆனால் 21 நாட்கள் தேவையான பெட்ரோல், டீசல் 7 ஆயிரம் பங்க்குகளில் கையிருப்பு இருப்பதாக விற்பனையாளர்கள் சங்க தலைவர் தெரிவித்தார். 

இருந்த போதிலும் சென்னை உள்பட பல மாவட்டங்களில் மக்கள் நீண்ட வரிசையில் பெட்ரோல் பங்குகளில் நிற்பதை பார்க்க முடிகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விற்று தீர்ந்து, பல பங்குகள் மூடப்பட்டு உள்ளது.

பழனி – பெட்ரோல் பங்க் மேலாளர் : வழக்கமாக நடைபெறும் பெட்ரோல், டீசல் விற்பனையை விட, 3 மடங்கு விற்பனை ஆனது. இதன் காரணமாக பங்க் தற்காலிகமாக மூடியுள்ளோம். எச்பி நிறுவனத்திடம் லோடு கேட்டு இருக்கிறோம், லோடு வந்த உடன் மீண்டும் விற்பனையை தொடங்கி விடுவோம். 

ஏழுமலை – தனியார் நிறுவன ஊழியர் : காலையில் இருந்து பல பெட்ரோல் பங்கிற்கு சென்று வந்துவிட்டேன். எங்கும் பெட்ரோல் இல்லை. வேலை நேரத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறேன். இப்படி பெட்ரோல் டிமாண்ட் ஆகும் என நினைத்து பார்க்க முடியவில்லை. 

கணேஷ் – சேல்ஸ்மேன் : 4 பெட்ரோல் பங்கிற்கு சென்று வந்துவிட்டேன். தற்போது வந்து இருப்பது 5 வது பெட்ரோல் பங்க். என்னுடைய அலுவலகம் 30 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. என்னுடைய டூ விலரில் 10 கி.மீட்டர் செல்லும அளவுக்கே பெட்ரோல் உள்ளது. லோடு வந்தால் மட்டும் பெட்ரோல் தருவோம் என கூறுகிறார்கள். என்ன செய்வது என்றே தெரியாமல் விழித்துக் கொண்டு இருக்கிறேன்.

முரளி – தனியார் நிறுவன ஊழியர் :  அயனாவரம் பகுதியில் இருக்கும் 4 பெட்ரோல் பங்கும் மூடப்பட்டு இருக்கிறது. காலையில் இருந்தே பெட்ரோல் போட பங்கு பங்காக அலைந்து கொண்டு இருக்கிறேன். ஆனால் எங்கும் பெட்ரோல் இல்லை. நான் வரும் வழியில் பலர் பெட்ரோல் இல்லாமல் டூ விலரை தள்ளி கொண்டு போகின்றனர். வண்டியை விட்டு விட்டு பஸ்ஸில் வேலைக்கு போகலாம் என இருக்கிறேன். 

 

 

 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here