back to top
20 C
London
Sunday, September 20, 2026
No menu items!
Homeஉலகம்கட்டுப்பாட்டை மீறிய Gemini AI... 3 நிறுவனங்களை ஹேக் செய்து அதிர்ச்சி..! - Kumudam

கட்டுப்பாட்டை மீறிய Gemini AI… 3 நிறுவனங்களை ஹேக் செய்து அதிர்ச்சி..! – Kumudam

Date:

Related stories

"புதிய தலைமைச் செயலகம் அவசியம்" – மாணிக்கம் தாகூர் விளக்கம் !

விஜய் தலைமையிலான கூட்டணி, பிரதமர் வேட்பாளர் சர்ச்சை, திமுக விமர்சனம்...

வேட்டுவம் தான் ஃபர்ஸ்ட் ! – பா. ரஞ்சித்! ஜெர்மன் தள்ளிப்போனது ஏன் ?

சூர்யாவை வைத்து பா. ரஞ்சித் உருவாக்க நினைத்த ஜெர்மன் படத்தின்...

“அது யாரையும் குறிவைச்சு சொன்னது இல்ல!” – விஜய் குறித்த கருத்து.. VJS  விளக்கம்!

கடந்த வாரம் தனது பேச்சால் எழுந்த சர்ச்சைக்கு விஜய் சேதுபதி,...
spot_imgspot_img



மே 2026-ல் சைபர் பாதுகாப்பு மதிப்பீட்டு நிறுவனமான Irregular நடத்திய சோதனையில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சோதனையில், உண்மையான நிறுவனங்களைப் போன்று உருவாக்கப்பட்ட போலி நிறுவனத்தின் சிஸ்டத்தில் தகவல்களைத் தேட Gemini-க்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், சோதனை சூழலில் எதிர்பாராத வகையில் இணைய அணுகல் கிடைத்ததால், AI நிஜ உலக சிஸ்டங்களையும் அணுகும் நிலை ஏற்பட்டது.

ஒரு சம்பவத்தில் பாதுகாக்கப்பட்ட சிஸ்டத்துக்குள் நுழைய Gemini பல்வேறு பாஸ்வேர்டுகளை முயற்சி செய்து அணுகலைப் பெற்றதாக கூறப்படுகிறது. மற்ற இரண்டு சம்பவங்களில் இணையத்தில் கிடைத்த தகவல்கள் மற்றும் பொதுவெளியில் இருந்த credentials-ஐ பயன்படுத்தி சிஸ்டங்களுக்குள் நுழைந்ததாக Google தெரிவித்துள்ளது.

ஆனால், இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், தான் அணுகியவை சோதனைக்காக உருவாக்கப்பட்ட போலி நிறுவனங்கள் அல்ல, நிஜ நிறுவனங்களின் சிஸ்டங்கள் என்பதை Gemini உணர்ந்ததும் தனது செயல்பாடுகளை தானாகவே நிறுத்தியுள்ளது. மூன்று சம்பவங்களிலும் இதேபோல் AI தனது நடவடிக்கையை முடித்துக் கொண்டதாக Google தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், சோதனை நடைமுறைகளில் தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் Google கூறியுள்ளது. சோதனையின்போது நடந்த இந்த ஊடுருவல்களால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

AI-யின் சைபர் பாதுகாப்புத் திறனை பரிசோதிக்க நடத்தப்பட்ட ஒரு சோதனையே எதிர்பாராத வகையில் நிஜ உலக சிஸ்டங்களுக்குள் கொண்டு சென்றிருப்பது, எதிர்கால AI பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த விவாதத்தையும் தீவிரப்படுத்தியுள்ளது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here