back to top
14.6 C
London
Saturday, June 6, 2026
No menu items!
Homeஅரசியல்தொண்டர்கள் ஏமாற்றம்: வெறிசோடிய பனையூர் தவெக அலுவலகம் - Kumudam

தொண்டர்கள் ஏமாற்றம்: வெறிசோடிய பனையூர் தவெக அலுவலகம் – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



சட்டசபை தேர்தலில், த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார். அதில் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். எனவே, எம்.எல்.ஏ.க்கள் 107 பேர் உள்ளனர். பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்பதால், ஆட்சி அமைக்க 118 தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி களின் ஆதரவை த.வெ.க. கேட்டது. 

அந்த வகையில்  தலா 2 எம்எல்ஏக்களை கொண்ட இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தவெகவிற்கு ஆதரவு கடிதம் அளித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு கடிதம் அளித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகிது. அதுமட்டுமின்றி, ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் தவெகவிற்கு ஆதரவு அளித்து கடிதம் அளித்துவிட்டதால், விஜய் முதல்வராக பதவியேற்பார் என உறுதியாக சொல்லப்பட்டது.

இதை தொடர்ந்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை, பனையூரில் உள்ள தவெக அலுவலகம் முன்பு திரண்டு இருந்த அக்கட்சி தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியை பரிமாறி கொண்டனர். ஆனால் விசிக, ஐயூஎம்எல் ஆகிய இருகட்சிகளும தவெக ஆதரவு அளிக்கவில்லை என தெளிவுப்படுத்தினர். இதனால் இன்றைய தினம் விஜய் முதல்வராக பதவியேற்பு நடைபெறவில்லை. 

நேற்றைய தினம் உற்சாக் கரை புரண்டு தவெக அலுவலகம், இன்றைய தினம் வெறிசோடி காணப்படுகிறது. தொண்டர்கள் யாரும் தவெக அலுவலகம் வராத காரணத்தால் களையிழந்து காணப்படுகிறது. விஜய் பதவியேற்பதில் ஏற்ப்பட்டுள்ள தாமத்தால் தவெகவினர் மிகுந்த ஏமாற்றம் அடைந்தே இதே காரணம். 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here