Home அரசியல் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டாம்: தவெகவிற்கு விசிக நிபந்தனையற்ற ஆதரவு: திருமாவளவன் அறிவிப்பு – Kumudam

ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டாம்: தவெகவிற்கு விசிக நிபந்தனையற்ற ஆதரவு: திருமாவளவன் அறிவிப்பு – Kumudam

0



தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றியது. த.வெ.க.வுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதை சுட்டிக்காட்டி, த.வெ.க.வை ஆட்சியமைக்க தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகர் அழைப்பு விடுக்கவில்லை.இதையடுத்து, பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை திரட்டும் முயற்சியில் த.வெ.க. ஈடுபட்டது. தங்களுக்கு ஆதரவு வழங்குமாறு தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள வி.சி.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(ஐ.யூ.எம்.எல்.) ஆகிய கட்சிகளுக்கு த.வெ.க. அழைப்பு விடுத்தது.

தவெகவின் அழைப்பை ஏற்று, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளும் விஜய்க்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதாக அறிவித்தன. அதே சமயம், திமுக கூட்டணியிலேயே தொடர்வதாகவும் தவெகவுக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்றும் ஐ.யூ.எம்.எல். அறிவித்தது.காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை அடுத்து தவெகவுக்கு தற்போது வரை 116 இடங்கள் உள்ள நிலையில், ஆட்சியமைக்க இன்னும் 2 இடங்கள் தேவை என்ற நிலை உள்ளது. 2 இடங்களை வைத்துள்ள விசிக, தனது நிலைப்பாட்டை இன்று அறிவிக்க உள்ளதாக தெரிவித்தது. முதலில், இன்று காலை 10 மணிக்கு திருமாவளவன் செய்தியாளர்களை சந்திப்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பு மேலும் தாமதமாகிறது.

அதாவது, மாலை 4 மணிக்கு திருமாவளவன் தனது முடிவினை அறிவிப்பார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், மதியம் 2.30 மணியளவில் தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த திருமாவளவனை, ஆதவ் அர்ஜூனா நேரில் சந்தித்து பேசினார். இந்த நிலையில் ஆதரவு கடிதத்தை மாலை 4.30 மணியளவில் ஆதவ் அர்ஜூனாவிடம் திருமாவளவன் அளித்துள்ளார். 



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version