Home உலகம் விமானத்தில் போதையில் ரகளை செய்த பிரபல நடிகை: எச்சரித்து அனுப்பிய போலீசார்  – Kumudam

விமானத்தில் போதையில் ரகளை செய்த பிரபல நடிகை: எச்சரித்து அனுப்பிய போலீசார்  – Kumudam

0



அமெரிக்காவின் பிரபல நடிகை நடாஷா லியோன் (47) கடந்த ஜனவரி மாதம், தான் மீண்டும் போதை பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டதாக உருக்கமாக தெரிவித்து இருந்தார். சுமார் 10 ஆண்டுகள் போதை பழக்கமின்றி இருந்தார். கடந்த 7ம் தேதி இரவு, ஹாலிவுட்டில் நடந்த சினிமா விழாவில் கலந்து கொண்ட அவர், பின்னர் லாஸ் ஏஞ்சல்சில் இருந்து நியூயார்க் செல்வதற்காக ‘டெல்டா’ விமானத்தில் பயணித்தார்.

விமானம் புறப்பட தயாரானபோது, முதல் வகுப்பு இருக்கையில் அமர்ந்திருந்த நடாஷா லியோன் சீட் பெல்ட் அணியாமல் தகராறு செய்துள்ளார். அதுமட்டுமின்றி, லேப்டாப்பையும் அணைக்க மறுத்த விமான பணியாளர்களிடம் வம்பு இழுத்துள்ளார். இதனால் விமான பணியாளர்கள் பல முறை நடிகையை எச்சரித்தனர். ஆனால் அவர் போதையில் வரம்பு மீறி செயலில் நடிகை ஈடுபட்டு வந்தார். இதனால் விமானியின் உத்தரவின் பேரில், போலீசார் உதவியுடன் நடிகை விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டார். 

இந்த சம்பவம் குறித்து நேற்று தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடாஷா லியோன், ‘எங்கள் நாட்டு விமான நிலையங்களில் ஊதியம் இன்றி பணியாற்றும் ஊழியர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. கடந்த புதன்கிழமை அன்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க திட்டமிட்டிருந்தேன், ஆனால் அது நடக்காமல் போய்விட்டது. மற்றபடி ஊடகங்கள் சொல்லும் கதைகளை பற்றி எனக்கு கவலை இல்லை’ என்று விளக்கம் அளித்துள்ளார். 



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version