back to top
19.2 C
London
Monday, September 14, 2026
No menu items!
Homeமாவட்டம்வண்டி டயர் வெடிச்சா என்ன? "தக்காளிய எடுங்கல"... மூட்டை மூட்டையாய் அள்ளி சென்ற மக்கள்... -...

வண்டி டயர் வெடிச்சா என்ன? “தக்காளிய எடுங்கல”… மூட்டை மூட்டையாய் அள்ளி சென்ற மக்கள்… – Kumudam

Date:

Related stories

காங்கிரஸ், பாஜகவுக்கு செக்? மூன்றாவது அணிக்கு அச்சாரம் போடும் திமுக?

திமுக தலைமையில் மூன்றாவது அணி உருவாகும் முயற்சி தீவிரமடைந்துள்ள நிலையில்,...

விநாயகர் சதுர்த்தியில் வெளியான ராமாயணா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் !

ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ராமாயணா’ படத்தின் முதல்...

“அவையை எப்படி நடத்தணும்னு எனக்குத் தெரியும்!” – சபாநாயகர் விளாசல் !

சட்டப்பேரவையில் பரபரப்பை ஏற்படுத்திய சில விவகாரங்கள் குறித்து சபாநாயகர் ஜே.சி.டி....
spot_imgspot_img


தருமபுரி மாவட்டம் அரூரில் இருந்து சுமார் 100 பெட்டிகளில் 3 டன் தக்காளி லோடு ஏற்றிக் கொண்டு மினி வேன் ஒன்று புறப்பட்டது. இந்த வேனை அரூரை சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞர் ஓட்டி வந்தார். வண்டி திண்டுக்கல் மாவட்டம் கல்வார்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே வந்தப் போது, திடீரென பின்பக்க டயர் வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், திண்டுக்கல் 4 வழிச்சாலையில் கவிழ்ந்தது. இதனால் வேனில் இருந்த தக்காளிகள் நட்ட நடு சாலையில் கொட்டியது. 

இந்த தகவல் விபத்து நடந்த பகுதி அருகே உள்ள கல்வார்பட்டி கிராம மக்களிடம் பரவிய நிலையில், பலரும் போட்டி போட்டுக் கொண்டு தக்காளியை சாக்கு பைகளில் அள்ளிச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மக்களை கலைத்து போக்குவரத்தை சீர் செய்தனர்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here