Home சினிமா என் பெயருக்கு முன்னாடி கமல் பெயரை முதல் போடுங்க: நெல்சனுக்கு ரஜினி போட்ட ஆர்டர் –...

என் பெயருக்கு முன்னாடி கமல் பெயரை முதல் போடுங்க: நெல்சனுக்கு ரஜினி போட்ட ஆர்டர் – Kumudam

0



படத்தின் புரோமோ வந்தபோது அதில் KH x RK என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது முதலில் கமல்ஹாசன் பெயர், இரண்டாவதாக ரஜினிகாந்த் பெயர் எனப் போடப்பட்டது.

தமிழ் திரையுலக ஜாம்பவான்களான  ரஜினிகாந்த் – கமல்ஹாசன் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்குப் பிறகு இணைந்து நடிக்கவுள்ளனர். இப்படத்தின் புரோமோ பிப்ரவரி 21ஆம் தேதி வெளியிடப்பட்டது. ரெட்ரோ ஸ்டைலில் ரஜினி – கமல் தோன்றும் இந்தப் புரோமோ பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை நெல்சன் இயக்க உள்ளார். 

இப்படத்தின் புரோமோ வந்தபோது, படத்தின் பெயருக்கு பதிலாக KH x RK என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதாவது முதலில் கமல்ஹாசன் பெயர், இரண்டாவதாக ரஜினிகாந்த் பெயர் எனப் போடப்பட்டது. முதலில் இது ரஜினிகாந்த் பெயர் முதலிலும், கமல்ஹாசன் பெயர் இரண்டாவதாகவும் போடப்பட்டுத் தான் புரோமோ தயார் செய்யப்பட்டதாம். 

ஆனால், ரஜினி இந்தப் பெயர் வரிசையைப் பார்த்துவிட்டு, “கமல்தான் சீனியர், அவர் பெயர் தான் முதலில் இருக்க வேண்டும்” எனக் கூறி கரெக்ஷன் செய்து இருக்கிறார். அடுத்தாண்டு பொங்கலுக்கு தலைவர் 173, தீபாவளிக்கு ரஜினி -கமல் படம் ரிலீஸ் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version