Home உலகம் அமெரிக்க புதிய வகை கொரோனா: 25 மாகாணங்களில் பரவல் மக்கள் அச்சம்  – Kumudam

அமெரிக்க புதிய வகை கொரோனா: 25 மாகாணங்களில் பரவல் மக்கள் அச்சம்  – Kumudam

0



2024-ம் ஆண்டு இறுதியில் தென்ஆப்பிரிக்காவில் காணப்பட்ட இந்த தொற்று, 2025-ம் ஆண்டில் பரவலாக பரவியது. 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. ஒமைக்ரான் என 2021-ம் ஆண்டு பரவலாக காணப்பட்ட வைரசின் தொடர்ச்சியாக இது உள்ளது. இதன் புரதம் 70 முதல் 75 வகையான உருமாற்றங்களை பெற்றுள்ளது.

இதனால், பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனினும், இதனால் உடனடியான அச்சுறுத்தல் எதுவும் பெரிய அளவில் இல்லை என டாக்டர் ஒருவர் கூறுகிறார். ஆனால், தற்போதுள்ள கொரோனா தடுப்பூசிகள் இதற்கு, அந்த அளவுக்கு பெரிய பலனை தரவில்லை. ஏனெனில் அவை விரைவாக உருமாற்றம் அடைந்து பல்வேறு வடிவங்களை பெற்று விடுகின்றன என கூறப்படுகிறது. 

2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா பெருந்தொற்று பின்னர் இந்தியா உள்பட உலக நாடுகள் முழுவதும் பல்வேறு அலைகளாக பரவி, பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. பிப்ரவரி மாத நிலவரப்படி உலகளவில் குறைந்தது 23 நாடுகளில் இது பரவியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முந்தைய வைரஸ்களை விட இதில் அதிகப்படியான மரபணு மாற்றங்கள் (சுமார் 70-க்கும் மேற்பட்ட பிறழ்வுகள்) இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவில், நெதர்லாந்திலிருந்து வந்த ஒரு பயணியிடம் இந்த மரபணு மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இது தடுப்பூசி மூலம் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது. இந்த வைரஸ் பெரிய அளவிலான பாதிப்பையோ அல்லது தீவிரமான உயிரிழப்பையோ ஏற்படுத்தும் என்று இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version