Home சினிமா மே 2 சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் சுற்று: பிரான்சில் ட்ராக்கை ஆய்வு செய்த அஜித்  –...

மே 2 சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் சுற்று: பிரான்சில் ட்ராக்கை ஆய்வு செய்த அஜித்  – Kumudam

0



தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் அஜித்குமார், கார் பந்தயத்தில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக அஜித்குமார் ரேசிங் என்ற சொந்த பந்தய அணியை தொடங்கி உள்ளார்.  கடந்த சில மாதங்களாக படப்பிடிப்புகளுக்கு பதிலாக வெளிநாடுகளில் நடைபெறும் சர்வதேச கார்ப் பந்தயங்களில் நடிகர் அஜித் தொடர்ச்சியாக பங்கேற்று வருகிறார்.

இதில்  துபாய், பெல்ஜியம், ஸ்பெயின், அபுதாபி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற பல்வேறு சர்வதேச கார்  போட்டிகளில் பங்கேற்று அஜித்குமார் ரேசிங் அணி பரிசுகளை வென்றுள்ளது. இந்நிலையில் பெல்ஜியம் கார் பந்தயத்தில் பிஸியாக இருந்த அஜித், கடந்த 22-ம் தேதி சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக சென்னை திரும்பினார். 

23-ம் தேதி வாக்களித்த பின்னர்  பிரான்சில் நடைபெற உள்ள மிச்செலின் லெ மான்ஸ் (Michelin Le Mans Cup) போட்டியில் பங்கேற்க சென்றார். இந்த நிலையில் பிரான்சில்  அஜித்குமார் ட்ராக் பார்வையிடும் வீடியோ வெளியாகியுள்ளது. சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகின் முக்கியமான போட்டிகளில் ஒன்றான இந்த தொடரின் இரண்டாம் சுற்றுப் போட்டி, மே 2ஆம் தேதி சர்க்யூட் பால் ரிகார்டில் நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் அஜித் ரெடான்ட் ரேஸிங் ‘Ajith Redant Racing’ அணி சார்பில் இரண்டு முக்கிய கார்கள் களமிறங்க உள்ளன. போட்டிக்கு முன்பாக அஜித்குமார் ட்ராக் ஆய்வு மேற்கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version