back to top
19.2 C
London
Monday, September 14, 2026
No menu items!
Homeமாவட்டம்நெடுஞ்சாலை ஓரத்துல அந்த மாதிரி தொழில்..அடாவடி செய்த திருநங்கைகள்-வெளுத்து வாங்கிய போலீஸ்  - Kumudam

நெடுஞ்சாலை ஓரத்துல அந்த மாதிரி தொழில்..அடாவடி செய்த திருநங்கைகள்-வெளுத்து வாங்கிய போலீஸ்  – Kumudam

Date:

Related stories

காங்கிரஸ், பாஜகவுக்கு செக்? மூன்றாவது அணிக்கு அச்சாரம் போடும் திமுக?

திமுக தலைமையில் மூன்றாவது அணி உருவாகும் முயற்சி தீவிரமடைந்துள்ள நிலையில்,...

விநாயகர் சதுர்த்தியில் வெளியான ராமாயணா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் !

ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ராமாயணா’ படத்தின் முதல்...

“அவையை எப்படி நடத்தணும்னு எனக்குத் தெரியும்!” – சபாநாயகர் விளாசல் !

சட்டப்பேரவையில் பரபரப்பை ஏற்படுத்திய சில விவகாரங்கள் குறித்து சபாநாயகர் ஜே.சி.டி....
spot_imgspot_img



நெல்லை அருகே காவல் நிலையத்தை அடித்து சேதப்படுத்திய திருநங்கைகளை போலீசார் லேசான தடியடி நடத்தி விரட்டியத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம்,  பணகுடி அருகே உள்ள காவல் கிணறு முதல் குமாரபுரம் தேசிய நெடுஞ்சாலைகளில் இரவு நேரங்களில் வாகனங்களை மறித்து திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சுற்றி திரிந்த திருநங்கைகள் சிலரை அழைத்து போலீசார் அடித்து விரட்டியுள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த திருநங்கைள்  25க்கும் மேற்பட்டோர் பணகுடி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகள் மற்றும் பதாகைகளை சேதப்படுத்தினர். 

பின்னர் அந்த பகுதியில் உள்ள சாலையின் குறுக்கே அமர்ந்து தங்களை தாக்கி விரட்டிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகளுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சில திருநங்கைகள் போலீசாரை நோக்கி ஆபாச வார்த்தைகளால் பேசி, உடைகளை கலைந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆவேசமடைந்த போலீசார் திருநங்கைகள் மீது லேசான தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். இதன்காரணமாக காவல்நிலைய பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here