வாக்கு எண்ணும் மையத்தில் திடீர் ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் குமார் கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வாக்கு என்னும் மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை உடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாளை காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கும். அதன் பின்னர் EVM வாக்கு பதிவு தொடங்கும் நிலையில் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சாதனை குறள் , கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
