Home மாவட்டம் கோடை வெயிலை விரட்டும் நுங்கு உணவு

கோடை வெயிலை விரட்டும் நுங்கு உணவு

கிருஷ்ணகிரி : கோடை வெளியின் தாக்கத்தால் நுங்கு விற்பனை அதிகரித்து வருகிறது - ஆயிரக்கணக்கான பணை மரங்களில் இருந்து அறுவடை செய்து சாலை ஓரங்களில் விற்க பட்டு வருகிறது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை, பர்கூர், போச்சம்பள்ளி , காவேரிப் பட்டினம் உள்ளிட்ட வட்டாரங்களில் ஆயிரக்கணக்கான பணை மரங்கள் உள்ளன. இதில் இருந்து பணை வெல்லம், நுங்கு, விறகு, பதநீர் போன்றவற்றை விற்பனை செய்யும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். தற்போது நுங்கு சீசன் தொடங்கி உள்ளதால் விவசாயிகள் நுங்கினை அறுவடை செய்து கிருஷ்ணகிரி - பாண்டிச்சேரி, - பெங்களூரு, சென்னை, சேலம் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் விற்பனை செய்து வருகின்றனர். கோடை வெளியின் தாக்கத்தால் சாலைகளில் பயணம் செய்வோர் விரும்பி உண்ணும் உணவாக நுங்கினை பயன்படுத்துகின்றனர். ஒரு நுங்கு 10 ரூபாய் எனும் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். கடும் வெயிலின் தாக்கத்தால் விற்பனையும் அதிகளவில் நடைபெறுகிறது. உடலுக்கு குளிர்ச்சி தருவது., தோல் நோய்கள் குணமாவது, தாகம் தீர்ப்பது, வயிற்று புண் குணமாவது என இயற்கையான குணங்களை கொண்டதால் பொது மக்கள் விரும்பி வாங்கி உண்ணுகின்றனர்.

0
Screenshot
Screenshot

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version