ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலில் தலையில் தேங்காய் உடைக்கும் வழிபாடு

ஓசூர் அருகே 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சித்தேஸ்வர சுவாமி, ஸ்ரீ கெம்பம்மா தேவி, ஸ்ரீ கட்டத பீரேஸ்வர சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் : தலைமேல் தேங்காய் உடைத்து பக்தர்கள் நூதன வழிபாடு* ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி கிராமத்தில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சித்தேஸ்வர சுவாமி, ஸ்ரீகெம்பம்மா தேவி, ஸ்ரீ கட்டத பீரேஸ்வர சுவாமி கோயில் உள்ளது பழமை வாய்ந்த இந்த கோயில் சிதிலமடைந்து கிடந்த நிலையில் கோயில் கமிட்டியினர் நாகராஜ் ஏற்பாட்டில், பழைய கோயிலை இடித்து விட்டு அதில் புதிய கோயில் கட்டும் பணிகளை மேற்கொண்டனர் அதனைத் தொடர்ந்து புதிதாக கோயில் கட்டப்பட்டு இன்று அந்த கோயிலில் சிலை பிரதிஷ்டை மற்றும் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது ராஜகோபுரம் மீதும் சுவாமி சிலை மீதும் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் சிறப்பு ஹோமங்கள் நடைபெற்று மாவிளக்குகளை எடுத்து வந்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர் அப்போது சுவாமிகளுக்கு மங்கள ஆரத்தி எடுத்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன இந்த கும்பாபிஷேக விழாவில் குரும்பர் இன மக்களின் பாரம்பரிய வழிபாடான தலைமேல் தேங்காய்களை உடைக்கும் நூதன வழிபாடு நடைபெற்றது முன்னதாக மேளதாளங்கள் முழங்க தொட்டம்மா, சிக்கம்மா, சித்த லிங்கேஸ்வரா, உஜ்ஜிலி லிங்கேஸ்வரா, கூலி சந்திரசாமி மற்றும் கரியால லிங்கேஸ்வரா உள்ளிட்ட பல்வேறு உற்சவ மூர்த்தி தெய்வங்கள் கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன அதனைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தலைமேல் 500 க்கும் மேற்பட்ட தேங்காய்களை உடைத்து நூதன வழிபாடுகளை மேற்கொண்டனர் அப்போது பக்தர்கள் பாரம்பரிய முறைப்படி நடனமாடி சாமிகளை வேண்டி கொண்டனர் அதனைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க பூசாரிகள் அனைவரும் அலங்கரிக்கப்பட்ட உற்சவமூர்த்தி தெய்வங்களை தலைமேல் எடுத்து கொண்டு அங்கு நடனமாடினர் இந்த திருவிழாவில் கெலவரப்பள்ளி கிராம மக்கள் மட்டுமல்லாமல் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர் மேலும் நிகழ்ச்சியில் கேபிள் மாதேஷ், மற்றும் கோவில் கமிட்டி நிர்வாகிகள் ஒரு பொதுமக்கள் என கலந்து கொண்டனர்

0
104
Screenshot

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here