back to top
25.3 C
London
Wednesday, June 17, 2026
No menu items!
Homeஅரசியல்கருத்துக்கணிப்பு ஆட்சி மாற்றம்: திமுகவை வம்பு இழுக்கும் மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  - Kumudam

கருத்துக்கணிப்பு ஆட்சி மாற்றம்: திமுகவை வம்பு இழுக்கும் மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



மா.கம்யூ கட்சி முன்னாள் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் பேசுகையில்: தேர்தலில் கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு குறைந்தது 6 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தபோதும் திமுக அதற்கு இடம் கொடுக்கவில்லை. இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் கொடுப்பதற்கு திமுக மறுத்துவிட்டது. எனவே அமையப்போகின்ற இந்த திமுக ஆட்சி எப்படியான ஆட்சியாக இருக்கும் என்பது கேள்விக்குறியாகத் தான் இருக்கிறது. 

காரணம் சொல்லவேண்டுமென்றால் இன்றைக்கும் இளைஞர்கள் மத்தியில் ஒரு கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டிருக்கிறது.திமுக அமைச்சர்கள் தமிழ்நாட்டில் இரட்டைவிகிதம் அளவில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக பெருமை பேசுகிறார்கள். அதற்கு முக்கியகாரணமாக இருந்த உழைக்கும் வர்க்கத்திற்கு அரசு பதிலுக்கு என்ன கொடுத்துள்ளது என்பது பெரிய கேள்வியாகத் தான் இருக்கிறது.

முக்கியமாக மற்ற தேர்தலை விட இந்த தேர்தலில் இளைஞர்களின் எழுச்சி அதிகமாக இருப்பதை நம்மால் பார்க்கமுடிகிறது. தமிழக அரசியலில் மாற்றம் வேண்டும் என்று இளைஞர்கள் நினைக்கும் எழுச்சியை நாம் பார்க்கிறோம். அது வரவேற்கத்தக்கது, பாராட்டத்தக்கது.திமுக ஆட்சி மீண்டும் அமைந்தாலும் அதில் மக்கள் நலன் பாதிக்கும்போதுகோரிக்கைகளை முன்னெடுத்து மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் நிச்சயமாக போராட்டத்தை முன்னெடுக்கும்” என்று பேசியுள்ளார்.

தவெக மாபெரும் சக்தி உருவெடுத்துள்ளது: வைகோ 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியிருப்பதாவது: த.வெ.க.,வுக்கு மாணவர்கள் மற்றும் முதன்முறை வாக்காளர்கள் ஆதரவு அதிகம் உள்ளது. ஓட்டுகள் எண்ணப்படும்போது தான் உண்மை நிலை தெரிய வரும். தமிழகத்தில் த.வெ.க., குறிப்பிடத்தக்க சக்தியாக உருவெடுத்துள்ளது. பலரின் உழைப்பு மற்றும் தியாகத்தால் உருவானது திராவிட இயக்கம். அதை யாராலும் அழிக்க முடியாது. என் நம்பிக்கை என்னவென்றால், தி.மு.க., கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here