back to top
22.6 C
London
Tuesday, June 16, 2026
No menu items!
Homeசினிமாசிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் ”சேயோன்” ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட் வெளியானது - Kumudam

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் ”சேயோன்” ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட் வெளியானது – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



கமல் ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அமரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் மற்றும் கமல் ஹாசன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று (பிப். 16) மாலை 5 மணிக்கு வெளியானது. சேயோன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.  இது தொடர்பான  ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு தொடர்பான புதிய வீடியோ காலையில் வெளியிடப்பட்டது. 

இந்த வீடியோவில் கமல் ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தாய் கிழவி படத்தை இயக்கி சிவக்குமார் முருகேசன் இந்த படத்தை இயக்க உள்ளார். தாய் கிழவி படம் இன்னும் வெளியாகத நிலையில், சிவகார்த்திகேயன் படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 

விபூதி பட்டத்தை அடித்து கையில் அரிவாளுடன் சிவகார்த்திகேயன் உட்கார்ந்து இருப்பது போன்றும், மயில் தோகை மற்றும் மயில்கள் சிவகார்த்திகேயனை சுற்றி இருப்பது போன்ற ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது. 

சிவகார்த்திகேயனின் 25-வது படமான பராசக்தி கமர்ஷியலாக வெற்றி பெற்றாலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இதனால் சேயோன் திரைப்படம் வெற்றி பெற வேணடிய கட்டாயம் சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்டுள்ளது. 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here