back to top
11 C
London
Friday, October 9, 2026
No menu items!
Homeசினிமாநண்பனுக்கு அனுப்பிய அந்த கடைசி மெசேஜ்... நானா படேக்கரின் மரணத்திற்கு முன் நடந்தது என்ன? -...

நண்பனுக்கு அனுப்பிய அந்த கடைசி மெசேஜ்… நானா படேக்கரின் மரணத்திற்கு முன் நடந்தது என்ன? – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


பிரபல இந்தியத் திரைப்பட நடிகரும் இயக்குநருமான நானா படேக்கர் (75), இன்று கோவாவில் உள்ள அவரது இல்லத்தில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாகக் காலமானார். 

நானா படேக்கர் உயிரிழப்பதற்குச் முன்பாக தனது நண்பருக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். கோவா மணிப்பால் மருத்துவமனை மருத்துவர் சேகர் சால்கர் தெரிவித்த தகவலின்படி, அதிகாலை 2:30 மணியளவில் நானா படேக்கர் தனது நண்பருக்குத் தனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக ஒரு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

நள்ளிரவு நேரம் என்பதால் நண்பர் அந்தச் செய்தியை உடனடி பார்க்காத நிலையில், நானா படேக்கர் அவரைத் தொலைபேசியில் அழைத்துள்ளார். தகவலறிந்த நண்பர் அதிகாலை 4 மணியளவில் அவரது வீட்டிற்கு விரைந்து சென்றுள்ளார்.

நண்பர் அங்கு சென்றபோது நானா படேக்கருக்கு அதிகளவில் வேர்த்து, அவர் மயக்க நிலைக்குச் சென்று கொண்டிருந்தார். இதையடுத்து, அங்கிருந்த பராமரிப்பாளர் உடனடியாக மணிப்பால் மருத்துவமனைக்கு ஓடிச் சென்று அவசர சிகிச்சைப் பிரிவினரையும் ஆம்புலன்ஸையும் அழைத்து வந்தார்.

மருத்துவக் குழுவினர் வந்தபோது அவரது இதயத் துடிப்பு நின்றுபோயிருந்ததால், உடனடியாக சிபிஆர் அளித்தபடியே அதிகாலை 4:30 மணியளவில் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மருத்துவமனையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிர இதய அழுத்தச் சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், அவரைக் காப்பாற்ற முடியாமல் அதிகாலை 5:30 மணியளவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து காவல்துறைக்குப் புகாரளிக்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அவரது உடல் கோவா மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. உயிரிழந்த தருணத்தில் அவரது குடும்பத்தினர் அருகில் இல்லாத நிலையில், நண்பர்களும் பராமரிப்பாளரும் மட்டுமே உடனிருந்துள்ளனர்.

‘விஷ்வநாத் படேகர்’ என்ற இயற்பெயர் கொண்ட நானா படேக்கர், 1978-இல் ‘கமன்’ (Gaman) திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். பாலிவுட்டில் முன்னணி நடிகராகத் திகழ்ந்த இவர், தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் நன்கு பரிச்சயமானவர்.

2008-இல் வெளியான ‘பொம்மலாட்டம்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த இவர், பின்னர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படத்தில் ‘ஹரிதாஸ்’ என்ற வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தித் தமிழ் ரசிகர்களின் மனதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here