back to top
12.7 C
London
Wednesday, October 7, 2026
No menu items!
Homeதமிழ்நாடுகள்ளழகர் கோயில் பெயர்ப்பலகையில் தமிழ் நீக்கமா?... உண்மை நிலவரம் என்ன? - Kumudam

கள்ளழகர் கோயில் பெயர்ப்பலகையில் தமிழ் நீக்கமா?… உண்மை நிலவரம் என்ன? – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


தமிழ்நாட்டில் புகழ்பெற்ற கோயிலாகத் திகழும் கள்ளழகர் கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகை தந்து தரிசனம் செய்வது வழக்கம். கோயிலின் நுழைவு வாயில் பகுதியில் மிகப் பிரமாண்டமான தோரண வாயில் உள்ளது. இந்த நுழைவு வாயிலில் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் “அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர்கோயில்” என்று எழுதப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்தப் பெயர்ப் பலகையில் எழுதப்பட்டிருந்த மூன்று மொழிகளில் தற்போது தமிழ் மொழி நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்தக் கோயிலின் பெயர்ப் பலகையில் உள்ள தமிழ் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல்கள் உண்மையா என்று அறியாமல், பல்வேறு தரப்பினரும் எதிர்வினைகளைத் தெரிவித்தனர்.

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், மதுரை கள்ளழகர் கோயில் நுழைவு வாயிலில் தமிழ் நீக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல்கள் பொய் என்றும், வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளதாவது: “மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலின் பெயர்ப் பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை என்பதை திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், கடந்த ஆண்டுகளில் எப்படி பெயர்ப் பலகை இருந்ததோ, இப்போதும் அதே முறையில்தான் உள்ளது என்பதையும் தெளிவுபடுத்துகிறேன்.  இதுபோன்ற செயல்கள் பொதுமக்களிடையே தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதுடன், அரசாங்கத்தின் மீதும், இந்து சமய அறநிலையத்துறையின் மீதும் மக்களிடையே அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாகவே கருத வேண்டியுள்ளது  என்று தெரிவித்துள்ளார்.”



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here