back to top
12.7 C
London
Wednesday, October 7, 2026
No menu items!
Homeசினிமா“என் தற்கொலைக்கு Biggboss Winner முத்துக்குமரன்தான் காரணம்”... வைரலான வீடியோ... அடுத்த நிமிடமே டெலிட்! -...

“என் தற்கொலைக்கு Biggboss Winner முத்துக்குமரன்தான் காரணம்”… வைரலான வீடியோ… அடுத்த நிமிடமே டெலிட்! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


சமூக வலைதளங்களில் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வந்த வஹிதா பேகம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டதாகக் கூறப்படும் வீடியோ ஒன்றில், தனது தற்கொலை முயற்சிக்கு முத்துக்குமரன்தான் காரணம் எனக் கூறியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியான சிறிது நேரத்திலேயே, அவரது பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்த வீடியோக்கள் அனைத்தும் நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ள ஒரு பதிவில், “Bhaiyamma posted suicide video on Instagram before deleting all posts. She said BiggBoss Muthukumar was the reason for it” என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவர் தனது பதிவுகளில் வந்த கருத்துகளை நீக்கி வருவதாகவும், தன்னைப் பற்றி கருத்து தெரிவிப்பவர்களை பிளாக் செய்து வருவதாகவும் அந்தப் பதிவில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அதே பதிவில், தமிழ்நாடு காவல்துறையை டேக் செய்து, அவரது உயிரைக் காப்பாற்றி முத்துக்குமரன் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தற்போது வஹிதா பேகம் மருத்துவமனையில் இருப்பதாகக் குறிப்பிட்டு தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவரது இந்தப் பதிவும், அதற்கு முன்பு வெளியானதாகக் கூறப்படும் வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.

எதனால் இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது? வஹிதா பேகத்துக்கும் முத்துக்குமரனுக்கும் இடையே என்ன நடந்தது? அவரது மருத்துவமனைப் பதிவு குறித்து முத்துக்குமரன் தரப்பில் என்ன பதில் வரும்? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here