back to top
22.5 C
London
Monday, October 5, 2026
No menu items!
HomeசினிமாTTF VASAN VS JASON...போர்களமாகும் பிக்பாஸ் வீடு...RED CARD யாருக்கு? - Kumudam

TTF VASAN VS JASON…போர்களமாகும் பிக்பாஸ் வீடு…RED CARD யாருக்கு? – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


தமிழ் விஜய் தொலைக்காட்சியில் ஒலிப்பரப்பாகும் பிக்பாஸ் சீசன் 10 அனைவராலும் ரசித்து பார்க்கக் கூடிய ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சியாக இருந்தும் வரும் நிலையில், இந்த வாரத்தில் வீட்டுக்குள் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் வீட்டின் படுக்கையறை பகுதியில் காலணிகளை வைப்பது தொடர்பாக பிக்பாஸ் போட்டியாளர்களான TTF வாசன் மற்றும் ஜேசன் இருவருக்குமிடையே திடீரென ஒரு சிறய கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆரம்பத்தில் சிறிய சண்டையாக தொடங்கிய நிலையில், சில நிமிடங்களிலேயே இரு தரப்பிலும் கோபத்தை  தூண்டி, கடுமையான வாக்குவாதமாக மாறியது.

இருவரும் ஒருவரையொருவர் நோக்கி ஆவேசமாக வார்த்தைகளை தடித்துப் பேசத் தொடங்கி வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில், கோபத்தின் எல்லைக்கே சென்ற இருவரும் ஒருவரையொருவர் நோக்கி ஆக்ரோஷமாக கத்த ஆரம்பித்தனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் எந்த நேரத்திலும் உடல் ரீதியாக மோதல் வெடிக்கலாம் என்று பதற்றமான சூழல் நிலவியது.

சூழ்நிலை கையை மீறிச் செல்வதையும், வன்முறையாக மாறக்கூடும் என்பதையும் உணர்ந்த வீட்டில் இருந்த மற்ற போட்டியாளர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து இருவருக்கும் இடையே தடுத்து நிறுத்தினர்.

தொடர்ந்து இருவரையும் தனித்தனியாக அழைத்துச் சென்று சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். சக போட்டியாளர்களின் இந்த உடனடி மற்றும் சமயோசிதமான தலையீட்டால், இந்த மோதல் மேலும் பெரிய அளவில் வெடிக்காமல் தடுத்து நிறுத்தப்பட்டது.

இருப்பினும், இந்த சம்பவத்திற்குப் பிறகு பிக்பாஸ் வீடு முழுவதும் கடுமையான பதற்றமும், ஒருவித அமைதியற்ற சூழலும் நிலவி வருகிறது. பிக்பாஸ் வீட்டில் ஒரு சிறிய, சாதாரண கருத்து வேறுபாடு கூட எவ்வளவு விரைவாக மிகப்பெரிய மோதலாகவும், சண்டையாகவும் உருவெடுக்கக்கூடும் என்பதை இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. இந்த சண்டையால் இருவருக்குக்கும் யாருக்கென்று ரெட் வழங்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த மோதலின் தாக்கம் வரும் நாட்களில் பிக்பாஸ் வீட்டுக்குள் என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்போம்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here