back to top
20.2 C
London
Thursday, October 1, 2026
No menu items!
Homeதமிழ்நாடுமாவட்டம் to மாவட்டம் இலவச பயணம் . மகளிர் தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் !...

மாவட்டம் to மாவட்டம் இலவச பயணம் . மகளிர் தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் ! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


தமிழ்நாட்டில் பெண்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யும் வகையில் ‘வெற்றி பயணம்’ திட்டம் நாளை (அக்டோபர் 2) முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. வருமான வரம்பு, பயணங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இல்லாத வகையில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கனவே பேருந்து பாஸ் வைத்திருப்பவர்கள் மற்றும் திட்டம் தொடங்கும் நேரம் தொடர்பாக சில முக்கியக் கேள்விகளும் எழுந்துள்ளன.

வெற்றி பயணம்: தெரிந்துகொள்ள வேண்டிய டாப் 10 அம்சங்கள் :

1. யார் பயனடையலாம் ?

திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள அரசுப் பேருந்து சேவைகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம். திருநங்கைகளும் விரிவாக்கப்பட்ட வெற்றி பயண வசதியைப் பயன்படுத்திக்கொள்ள தகுதியுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. வருமான வரம்பு இல்லை :

இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைய எந்தவொரு வருமான வரம்பும் அறிவிக்கப்படவில்லை. குடும்ப வருமானத்தின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவதில்லை.

3. பயண எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு இல்லை :

ஒரு பயனாளி மேற்கொள்ளும் பயணங்களின் எண்ணிக்கைக்கு எந்தக் கட்டுப்பாடும் அறிவிக்கப்படவில்லை. திட்டத்தின் கீழ் வரும் பேருந்துகளில் விதிமுறைகளுக்கு உட்பட்டு தொடர்ந்து இலவசமாகப் பயணிக்கலாம்.

4. விண்ணப்பம் தேவையில்லை :

வெற்றி பயணத் திட்டத்திற்காக ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் விண்ணப்பம் செய்ய வேண்டியதில்லை. தகுதியுள்ளவர்கள் பேருந்தில் பயணம் செய்யும்போதே இந்த வசதியைப் பெற்றுக்கொள்ளலாம்.

5. தனி குடியிருப்பு நிபந்தனை இல்லை :

இத்திட்டத்திற்காக தனியாக எந்தவொரு வசிப்பிட அல்லது குடியிருப்பு நிபந்தனையும் அறிவிக்கப்படவில்லை. திட்டத்தின் கீழ் வரும் பேருந்து சேவையில் பயணம் செய்வதே முக்கிய அம்சமாகும்.

6. எந்தப் பேருந்துகளில் சலுகை?

பெருநகர மற்றும் நகர்ப்புறங்களில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் (EXPRESS), எல்எஸ்எஸ் (LSS) மற்றும் டீலக்ஸ் (DEULEX) பேருந்துகள் உள்ளிட்ட குறிப்பிட்ட சேவைகள் திட்டத்தின் கீழ் வருகின்றன.

மேலும், 40 கி.மீ.க்கு மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் புறநகர் சாதாரணப் பேருந்துகள், மலைப்பாதை சாதாரணப் பேருந்துகள், ஏழு மாநிலப் போக்குவரத்துக் கழகங்களின் நகரப் பேருந்துகள் மற்றும் 40 கி.மீ. வரையிலான மலைப்பகுதி பேருந்துகளும் இதில் இடம்பெறுகின்றன.

அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி பார்த்தால், எக்ஸ்பிரஸ் பஸ்களில் ஒரு ஒரு மாவட்டத்திற்கு ஒரு பஸ் என்ற வீதம் பயணம் செய்ய முடியும். குறிப்பாக் அதமிழகத்தில் அரசு எக்ஸ்பிரஸ் பஸ்கள் 30 – 100 கி.மீ. வரையும், எல்.எஸ்.எஸ். பஸ்கள் 30 – 40 கி.மீ. வரையும், டீலக்ஸ் பஸ்கள் 30 – 50 கி.மீ. வரையும் இயக்கப்பட்டு வருகிறது. எனவே இதை வைத்து பார்க்கும் போது, எக்ஸ்பிரஸ் பஸ்களில் பெண்கள் 100 கிமீ தூரம் கட்டணம் செலுத்தாமல் இலவசமாக பயணிக்க முடியும்.

எக்ஸ்பிரஸ் பேருந்தில் பயணிக்கும் எடுத்துக்காட்டு :

இதனால் சென்னையில் இருந்து பெண் ஒருவர் எக்ஸ்பிரஸ் பஸ்சில் ஏறினால் முதலில் செங்கல்பட்டு வரை இலவசமாக பயணிக்க முடியும். பிறகு திண்டிவனம் அடுத்து விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, நெல்லை, நாகர்கோவில், குமரி என மாறி மாறி கட்டணம் எதுவும் செலுத்தாமலே இலவசமாக பயணிக்கலாம் என தெரிகிறது.

இது மட்டும் இன்றி நகரங்களில் இருந்து இன்னொரு நகரத்திற்கு அதாவது, திருச்சியில் இருந்து திண்டுக்கல்லுக்கும், தஞ்சையில் இருந்து நாகைக்கும், தஞ்சையில் இருந்து வேளாங்கண்ணிக்கும், திண்டிவனத்தில் இருந்து விழுப்புரத்திற்கும், விருத்தாசலத்தில் இருந்து திருச்சிக்கும், கோவை டூ பழனிக்கும் பழனி டூ திண்டுக்கல், கோவை டூ ஈரோடு, ஈரோடு டூ சேலம், மதுரை டூ விருதுநகர், விருதுநகர் டூ கோவில்பட்டி, நெல்லை டூ நாகர்கோவில் என அரசு எக்ஸ்பிரஸ் பஸ்களில் பெண்கள் கட்டணம் இல்லாமல் இலவசமாக பயணிக்க முடியும்.

7. ஆவணங்கள் தேவையா ?

முன்கூட்டியே எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. இருப்பினும், பயணத்தின் போது அடையாளச் சான்று கேட்கப்பட்டால் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை அல்லது அரசு வழங்கிய புகைப்பட அடையாள அட்டையை காண்பிக்க வேண்டியிருக்கலாம்.

8. ரூ.0 பயணச்சீட்டு வழங்கப்படும் :

இலவசப் பயணத்தைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு நடத்துனர் பூஜ்ஜிய மதிப்புள்ள, அதாவது ரூ.0 பயணச்சீட்டை வழங்கலாம். பயணம் முடியும் வரை அந்தச் சீட்டை வைத்திருப்பது பாதுகாப்பானது.

9. ஏற்கனவே பாஸ் வைத்திருப்பவர்களுக்கு என்ன?

முதியோர் பாஸ் வைத்திருக்கும் பெண்கள், மாற்றுத்திறனாளி அட்டை வைத்திருக்கும் பெண்கள் மற்றும் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பாஸ் ஆகியவற்றுடன் வெற்றி பயணத் திட்டம் எவ்வாறு பொருந்தும் என்பது குறித்து தெளிவான அதிகாரப்பூர்வ விளக்கம் தேவைப்படுகிறது.

10. காலை 10 மணிக்கு முன் பயணம் தொடங்கினால்?

வெற்றி பயணத் திட்டம் நாளை காலை 10 மணியளவில் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 10 மணிக்கு முன்பாகப் பேருந்தில் ஏறும் பெண்களுக்கு இந்தச் சலுகை பொருந்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

உதாரணமாக, சென்னை முதல் விழுப்புரம் செல்லும் எக்ஸ்பிரஸ் பேருந்தில் காலை 10 மணிக்கு முன் பயணத்தைத் தொடங்கும் பெண்ணுக்கு கட்டணம் வசூலிக்கப்படுமா? அதேபோல், 10 மணிக்கு முன் கட்டணம் செலுத்தி பயணத்தைத் தொடங்கி, திட்டம் தொடங்கிய பிறகு விழுப்புரத்திலிருந்து கள்ளக்குறிச்சி செல்லும் நிலையில், அடுத்த கட்டப் பயணத்திற்கு இலவசச் சலுகை கிடைக்குமா? என்பதும் தெளிவுபடுத்தப்பட வேண்டியுள்ளது.

பெண்களுக்கு எழும் முக்கியக் கேள்விகள் :

வெற்றி பயணத் திட்டம் பெண்களுக்கு பயனளிக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே நடைமுறையில் உள்ள முதியோர் பாஸ், மாற்றுத்திறனாளி சலுகைகள் மற்றும் போக்குவரத்துக் கழக ஊழியர் குடும்ப பாஸ் ஆகியவற்றுடன் புதிய திட்டம் எவ்வாறு இணைக்கப்படும் என்பது முக்கியக் கேள்வியாக உள்ளது.

மேலும், மாவட்டங்களுக்கு இடையேயான பயணங்கள், காலை 10 மணிக்கு முன் தொடங்கும் பயணங்கள் மற்றும் திட்டம் தொடங்கிய பிறகும் தொடரும் பயணங்களுக்கான கட்டண நடைமுறை குறித்தும் தெளிவான வழிகாட்டுதல் தேவைப்படுகிறது.

போக்குவரத்துத் துறை வெளியிடும் விரிவான நடைமுறை வழிகாட்டுதல்களுக்குப் பிறகே இந்தக் குழப்பங்களுக்கு முழுமையான விளக்கம் கிடைக்கும்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here