back to top
23.8 C
London
Tuesday, September 29, 2026
No menu items!
Homeதமிழ்நாடு13 ஐபிஎஸ் மாற்றம் ! சட்ட ஒழுங்கு சரியாகுமா? குற்ற தடுப்பில் தமிழ்நாடு அரசின் அதிரடி...

13 ஐபிஎஸ் மாற்றம் ! சட்ட ஒழுங்கு சரியாகுமா? குற்ற தடுப்பில் தமிழ்நாடு அரசின் அதிரடி மூவ் ! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


தமிழ்நாட்டில் காவல்துறை நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் 13 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. காவல்துறையின் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றி வந்த அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ள நிலையில், சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளில் இந்த மாற்றங்கள் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சமீப காலங்களில் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் தொடர்பாக சட்ட ஒழுங்கு குறித்து பொதுமக்கள் மத்தியில் கவனம் அதிகரித்துள்ளது. இந்த சூழலில் காவல்துறையின் உயர் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நிர்வாக மாற்றங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

சேலம் மாநகர காவல் ஆணையர் மாற்றம் :

சேலம் மாநகர காவல் ஆணையராக இருந்த கே.ஜோஷி நிர்மல் குமார், சென்னை டிஜிபி அலுவலக நவீனமயமாக்கல் பிரிவு ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை பெருநகர காவல்துறையின் கூடுதல் ஆணையராக பணியாற்றி வந்த ஏ.ஜி.பாபு, சேலம் மாநகரத்தின் புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய காவல் பிரிவுகளில் புதிய நியமனங்கள் :

சேலம் சரக டிஐஜியாக இருந்த டாக்டர் சந்தோஷ் ஹதிமானி, சென்னை பெருநகர காவல்துறை நுண்ணறிவு பிரிவு கூட்டு ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

லஞ்ச ஒழிப்புத்துறை டிஐஜியாக இருந்த என்.தேவராணி, சேலம் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி.யாக இருந்த பத்ரி நாராயணன், சென்னை அடையாறு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

எஸ்.பி. நிலையில் நடைபெற்ற மாற்றங்கள் :

காத்திருப்புப் பட்டியலில் இருந்த எஸ்.பி. கார்த்திகேயன், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை போதைப் பொருள் தடுப்பு குற்றப் புலனாய்வு பிரிவு எஸ்.பி. மதிவாணன், சென்னை பரங்கிமலை துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை பரங்கிமலை துணை ஆணையராக இருந்த ஸ்ரீனிவாசன், சென்னை போதைப் பொருள் தடுப்பு குற்றப் புலனாய்வு பிரிவு எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய எஸ்.பி.யாக இருந்த ஸ்டாலின், சிபிசிஐடி தென் மண்டல எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை மாநகர பாதுகாப்பு துணை ஆணையராக இருந்த சுந்தர வடிவேல், சென்னை மாநகர காவலர் நலன் பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை வண்ணாரப்பேட்டை துணை ஆணையராக இருந்த பாஸ்கரன், சேலம் மாநகர வடக்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்ட ஒழுங்கில் மாற்றத்தை ஏற்படுத்துமா ? 

தமிழ்நாட்டில் குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்துவதும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் காவல்துறையின் முக்கிய பொறுப்பாக உள்ளது. குறிப்பாக பெண்களின் பாதுகாப்பு, கொள்ளை மற்றும் வன்முறை சம்பவங்களை தடுப்பது தொடர்பாக காவல்துறை நடவடிக்கைகள் மீது மக்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், காவல்துறையின் முக்கிய பொறுப்புகளில் செய்யப்பட்டுள்ள இந்த ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம், சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளில் புதிய அணுகுமுறையை கொண்டு வருமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

முதலமைச்சர் விஜய் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை மற்றும் சட்ட ஒழுங்கு பிரிவு, இனி வரும் காலங்களில் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரமாக மேற்கொண்டு, பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் செயல்படுமா என்பதே தற்போதைய முக்கிய கேள்வியாக உள்ளது.

காவல்துறை நிர்வாகத்தில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றங்கள் நடைமுறையில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது, புதிய பொறுப்புகளை ஏற்றுள்ள அதிகாரிகளின் செயல்பாடுகளை பொறுத்தே அமையும்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here