back to top
23.1 C
London
Wednesday, September 23, 2026
No menu items!
Homeஅரசியல்அப்செட்டில் இருந்த வானதி ....ப்ரோமோஷன் கொடுத்த பாஜக! - Kumudam

அப்செட்டில் இருந்த வானதி ….ப்ரோமோஷன் கொடுத்த பாஜக! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான பொறுப்பாளர்களை மாற்றியமைத்து, புதிய பொறுப்பாளர்களின் பட்டியலை பாஜக அறிவித்துள்ளது.

அதன்படி, தமிழ்நாடு மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களுக்கான பொறுப்பாளராக ராம் மாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டிற்கு இரண்டு இணை பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். டி.கே. அருணா மற்றும் நிர்மல் குமார் சுரானா ஆகியோர் தமிழ்நாட்டின் இணை பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, வானதி சீனிவாசன் ஆந்திர மாநிலத்தின் இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பாஜக வெளியிட்டுள்ளது.

தேசிய மகளிர் அணி தலைவர் பதவியில் மாற்றம்

வானதி சீனிவாசன் இதற்கு முன்பு பாஜக தேசிய மகளிர் அணி தலைவராகப் பதவி வகித்து வந்தார். கடந்த மாதம் அவர் அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், சத்தீஸ்கரைச் சேர்ந்த ரூப் குமாரி சௌத்ரி புதிய தேசிய மகளிர் அணி தலைவராக நியமிக்கப்பட்டார்.

பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தளப் பதிவில் கட்சிக்கும் தலைமைக்கும் நன்றி தெரிவித்திருந்தார். அதில், கடந்த பதவிக்காலத்தில் பாஜக மகளிர் அணியின் தேசியத் தலைவராகப் பொறுப்பேற்கும் வாய்ப்பை வழங்கிய கட்சிக்கும், தலைமைக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்திருந்தார்.

மேலும், புதிய அணிக்கு வாழ்த்து தெரிவித்த அவர், அவர்கள் சிறப்பாக செயல்பட்டு, இந்தப் பயணத்தை வெற்றிகரமாகவும் மனநிறைவு அளிப்பதாகவும் அமைத்துக்கொள்ள வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், தற்போது ஆந்திர மாநிலத்தின் இணை பொறுப்பாளராக வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டிருப்பது பாஜக வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here