back to top
17.6 C
London
Friday, September 18, 2026
No menu items!
Homeஅரசியல்வி.எஸ்.பாபுவின் உடல்நிலை எப்படி இருக்கு?...மருத்துவ நிர்வாகம் சொன்னது என்ன? - Kumudam

வி.எஸ்.பாபுவின் உடல்நிலை எப்படி இருக்கு?…மருத்துவ நிர்வாகம் சொன்னது என்ன? – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


சென்னை கொளத்தூர் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள வி.எஸ்.பாபு, தனது குடும்பத்துடன் கொளத்தூரில் வசித்து வருகிறார். கடந்த 9-ம் தேதி அதிகாலை அவருக்கு திடீரென கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, குடும்பத்தினர் உடனடியாக அவரை சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்து சிகிச்சையை தொடங்கினர். தொடர்ந்து, பல்துறை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வி.எஸ்.பாபுவின் உடல்நிலை தற்போது சீராகவும், திருப்திகரமாகவும் உள்ளது. அவரது உடல்நிலையை பல்துறை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவருக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைக்கு அவரது உடல் நல்ல முறையில் ஒத்துழைப்பு அளித்து வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கும் வி.எஸ்.பாபுவின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்த தகவல் வெளியானதை தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மருத்துவமனை நிர்வாகத்திடம் தொடர்ந்து விவரங்களை கேட்டறிந்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் அவரது உடல்நலம் குறித்து பலரும் விசாரித்து வருகின்றனர்.

மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பு மற்றும் சிகிச்சையின் மூலம் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் விரைவில் முழுமையாக குணமடைய வேண்டும் என்று தவெகவின் அமைச்சர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here