back to top
21.5 C
London
Monday, September 14, 2026
No menu items!
Homeசினிமா’இசை’ஞானி அடையாளத்தை திருட முயற்சியா? சாய் அபயங்கர் நகர்வுகள் சொல்வது என்ன? - Kumudam

’இசை’ஞானி அடையாளத்தை திருட முயற்சியா? சாய் அபயங்கர் நகர்வுகள் சொல்வது என்ன? – Kumudam

Date:

Related stories

விநாயகர் சதுர்த்தியில் வெளியான ராமாயணா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் !

ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ராமாயணா’ படத்தின் முதல்...

“அவையை எப்படி நடத்தணும்னு எனக்குத் தெரியும்!” – சபாநாயகர் விளாசல் !

சட்டப்பேரவையில் பரபரப்பை ஏற்படுத்திய சில விவகாரங்கள் குறித்து சபாநாயகர் ஜே.சி.டி....

sardar 2 movie review : கர்ஜிக்கும் ஆக்‌ஷன்… கடுப்பேற்றும் லாஜிக்!

நடிகர் கார்த்தியின் ‘சர்தார் 2’ திரைப்படம் ரசிகர்களை கவர்ந்ததா? படத்தின்...
spot_imgspot_img



இசைனாலே இளையாராஜா.. இளையராஜானாலே இசை தான்.. நேற்று இல்லை, நாளை இல்லை, எப்பவுமே இசையின் ராஜா நம்ம இளையராஜா தான். 1976ம் ஆண்டு இளையராஜாவாக உருமாறிய காலந்தொட்டு, இதோ… இந்த 2026 வரையிலும் கூட, இளையராஜா லீவு போடாமல் ‘என் கடன் பணி செய்துகிடப்பதே’ என்று செயலாற்றிக் கொண்டேதான் இருக்கிறார் என்பதே அவரது ரசிகர்களின் வாதம்.

இந்த நிலையில், பல தலைமுறைகளைத் தாண்டி இவரது இசை இன்று வரை ரசிகர்களை ஆக்கிரமித்து வரும் நிலையில், ஜென் X,Y,Z, Alpha, Beta என புதிய தலைமுறையில் வேகமாக கவனம் பெற்று வரும் இசையமைப்பாளர் சாய் அபயங்கரை சுற்றி தற்போது ஒரு புதிய விவாதம் உருவாகியுள்ளது.

சாய் அபயங்கர் இடம்பெறும் ‘மகளே’ பாடல் வீடியோவில் அவரது தோற்றம், இளையராஜாவின் இளமைக்கால ரெட்ரோ தோற்றத்தை நினைவுபடுத்துவதாக சமூக வலைதளங்களில் சிலர் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

குறிப்பாக, வெள்ளை சட்டை, hairstyle, microphone முன் நிற்கும் விதம், கை அசைவுகள் உள்ளிட்ட பல அம்சங்கள் பழைய கால இளையராஜாவின் புகைப்படத்துடன் ஒப்பிடப்பட்டு வருகின்றன.

இதனால், “இது வெறும் styling-ஆ? அல்லது இளையராஜாவின் அடையாளத்தை நினைவுபடுத்தும் வகையில் திட்டமிடப்பட்ட visual presentation-ஆ?” என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சரி அப்படியே இருந்தாலும், ரெட்ரோ ஸ்டைல் என்னும் போது இளையராஜாவை தானே ரீகிரியேட் செய்ய முடியும் என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டாலும், இது திட்டமிட்ட அடையாளத் திருட்டு என்பதே இளையராஜா ரசிகர்களின் கூற்றாக இருக்கிறது. 

இளையராஜாவை ஓரங்கட்டும் முயற்சியா?

இளையராஜாவின் இசைப் பயணம் என்பது வெறும் திரைப்பட இசைப் பயணம் மட்டுமல்ல. இசை வரலாற்றில் மிகப்பெரிய கலாச்சார அடையாளம் இளையராஜா.  அவரது சமூகப் பின்னணி மற்றும் திரையுலகில் அவர் எதிர்கொண்ட சாதிய பாகுபாடுகள், ஒடுக்குமுறைகள் இதுவரை எந்த இசையமைப்பாளரும் கண்டிராத ஒன்று. 

யாருமே செய்யத் துணியாத, திருவாசகத்திற்கு இசையமைத்து, ஆன்மீகவாதிகளுக்கு தன்னுடைய இசையால் அருள்புரிந்தவர் இளையராஜா. ஆனால், அப்படிப்பட்டவரையே ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கருவறைக்குள் நுழையவிடாமல் தடுத்தது சாதி. என்னத்தான், சாதியால் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளானாலும், எல்லா சாதியினரும் இவரது பாட்டை கேட்காமல் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. தலைமுறைகள் பல கடந்தாலும், சாதியால் ஒடுக்குமுறைக்கு உள்ளானாலும், ‘என் கடன் பணி செய்துகிடப்பதே’ என்பதே இளையராஜாவின் நிலை. 

இந்த பின்னணியில், “இளையராஜா என்ற பெயரை அடுத்த தலைமுறையின் நினைவிலிருந்து மெதுவாக பின்னுக்குத் தள்ளி, புதிய இசை முகங்களை முன்னிறுத்தும் கலாச்சார அரசியல் நடக்கிறதா? என்ற கேள்வியை சில இளையராஜா ரசிகர்கள் முன்வைக்கின்றனர்.

அதிலும் குறிப்பாக, தற்போது சாய் அபயங்கர் வேகமாக பிரபலமடைந்து வரும் நிலையில், “இசை என்றாலே இளையராஜா” என்ற நீண்டகால பொதுப்பிம்பத்திற்கு மாற்றாக, “இசை என்றாலே சாய் அபயங்கர்” என்ற புதிய brand உருவாக்கப்படுகிறதா? என்றும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

சாய் அபயங்கர்… அடுத்த இளையராஜாவா?

இங்கேதான் இந்த விவாதம் சினிமாவைத் தாண்டி ‘Music Politics’ என்ற கோணத்தை எடுக்கிறது. ஒரு கலைஞரை மறக்கடிப்பது என்பது அவரைப் பற்றி பேசாமல் இருப்பது மட்டுமல்ல. அவருடைய இடத்தை மற்றொரு புதிய அடையாளத்தால் மெதுவாக நிரப்புவதும் ஒரு வழியாக இருக்கலாம் என்ற வாதம் தான் அது. 

அதன்படி சாய் அபயங்கரின் இந்த Brand Value தோற்றம் இளையராஜாவை திட்டமிட்டு replace செய்வதற்கான முயற்சி என்று சிலர் நம்புகின்றனர். குறிப்பாக, அவரது டைட்டில் கார்ட்டான ‘Isai’, அண்மையில் வெளியான பாடலின் காட்சி என இசையின் ராஜா இளையராஜாவின் அடையாளங்களை சாய் அபயங்கர் மிகவும் Diluted-ஆக திருடுகிறார் என்பதை சுட்டிக்காட்டுகிறார்கள் ராஜா ரசிகர்கள். 
 
இது தற்செயலா… அல்லது ‘Music Politics’-ஆ?

ஒருபக்கம் இளையராஜாவின் இசை மரபு. மறுபக்கம் புதிய தலைமுறையின் இசை முகமாக உருவாகும் சாய் அபயங்கர். இதற்கிடையே, சில முக்கியமான கேள்விகள் மட்டும் எழுகின்றன. அதாவது, அடுத்த தலைமுறைக்கு இசையின் அடையாளமாக யார் நினைவில் நிற்கப் போகிறார்கள்? சாய் அபயங்கரின் வளர்ச்சி இயல்பான தலைமுறை மாற்றமா? அல்லது இளையராஜாவின் மிகப்பெரிய இசை அடையாளத்திற்கு மாற்றாக புதிய image உருவாக்கப்படுகிறதா? போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. 

இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், ஆகஸ்ட் 22-ல் இளையராஜா இசையமைத்த ‘கல்யாண விருந்து’ பாடல் ரிலீஸாகிறது, ஆகஸ்ட் 24ல் சாய் அபயங்கரின் ‘ரதிமா’ பாடல் ரீலீஸ் செய்யப்படுகிறது. இப்படி, அடுத்த தலைமுறையினரையும் இளையராஜா இசை சுண்டி இழுக்கும்போது, அதற்கு போட்டியாக சாய் அபயங்கர் ஜென் ஸி-க்களை டைவர்ட் செய்து வருகிறார் என்பது ராஜா கன்னிக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. 

ஆனால், நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள்… சாதிய ஒடுக்குமுறைகளை கையாளுங்கள்.. என் அடையாளத்தை திருடக் கூட முயற்சி செய்யுங்கள்.. ஆனால் நீங்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத இடத்தில் இருக்கிறேன்.. ஏனென்றால் ”புதுராகம் படைப்பதாலே நானும் இறைவனே” என தன்னுடைய இசையின் மூலம் நமக்கெல்லாம் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார் நம் இசைக் கடவுள். 

அதற்கு சிறந்த உதாரணத்தைச் சொல்லியே ஆகவேண்டும். அண்மையில் ‘டோரத்தி’ பட இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இளையராஜாவிடம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், “கே. பாலச்சந்தர், பாரதிராஜா போன்ற இயக்குநர்களிடம் பணியாற்றிவிட்டு என்னைப் போன்ற சுள்ளான் ஒரு திரைப்படத்தை எடுத்துவிட்டு உங்களிடம் கொண்டு வரும்போது என்ன நினைப்பீர்கள்?” எனக் கேட்டார்.

அதற்கு, “என்னுடைய நோக்கமே புதிதாக வருபவர்களுக்கு இசையமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதுதான். ஏனென்றால், அங்குதான் பாத்திரம் காலியாக இருக்கும். அதனால், புதிதாக வருபவர்கள் கதையுடன் வருவார்கள். அதனை நிரப்பிக்கொடுப்பதுதான் என் வேலை. இதுமாதிரி, அதுமாதிரி இசை வேண்டும் எனச் சொன்னாலும் என் காதில் ஏறாது. இது நல்ல இசையா இல்லையா என்பதையே என் இசைதான் அளவீடாக கொண்டுள்ளது. 

என் இசைபோல் உலகில் வேறு ஏதாவது இருக்கிறதா? வேண்டுமென்றால் சோதனை செய்து பாருங்கள். என்னுடைய இசை போல் எங்கு இருக்கிறது? எல்லாருக்கும் இசையைக் கற்றுக்கொடுத்த வாத்தியார்கள் உண்டு. எனக்கு எவனும் இசை கற்றுக்கொடுக்கவில்லை. பொட்டல் காட்டிலிருந்து வந்தவன் நான். இன்றுவரை எனக்கு இசை தெரியாது. அதற்கு அடையாளம், நான் இன்னும் இசையமைத்துக்கொண்டிருப்பதுதான். 

இதை நான் கர்வமாகச் சொல்கிறேன் என நினைக்காதீர்கள். கர்வமாகத்தான் சொல்கிறேன்” என்றார் இளையராஜா. 

இவரின், இப்பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில், இளையராஜா கர்வமாகப் பேசுகிறார் என வழக்கமாக சிலர் பதிவிட்டு வந்தாலும், அதே வழக்கம் போல் ராஜா ரசிகர்கள், ‘எங்க ராஜா அப்படித்தான்’ என பதிலளித்து வருகின்றனர். யார் யாரோ தன்னை இசை என்று குறிப்பிட்டுக் கொள்ளும்போது, இசையே இசையென குறிப்பிடுவதில் என்ன தவறு இருக்கிறது என்று வாதிடுகின்றனர். 

சாய் அபயங்கர் புதிய தலைமுறையின் இசை முகமாக வளர்கிறாரா? நிச்சயம் அதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், அதற்காக இளையராஜாவின் இடம் குறைந்து விடுமா? அதுதான் இந்த முழு விவாதத்தின் மையக் கேள்வி.

ஏனெனில், தலைமுறைகள் மாறலாம்… இசையின் trend மாறலாம்… புதிய இசையமைப்பாளர்கள் வரலாம். ஆனால், பல தலைமுறைகளின் நினைவுகளோடு கலந்துவிட்ட ஒரு இசை அடையாளத்தை ‘replace’ செய்வது அவ்வளவு எளிதல்ல. அதனால்தான் இன்றும் ராஜா ரசிகர்கள் ஒரே வார்த்தையைச் சொல்கிறார்கள், “நேற்று இல்லை… நாளை இல்லை.. எப்பவும் இசையின் ராஜா எங்க ராஜா தான்!”



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here