back to top
21.4 C
London
Sunday, September 13, 2026
No menu items!
Homeஅரசியல்இடைத்தேர்தல்.. படுவேகம் காட்டும் திமுக.. பொறுப்பாளர்கள் நியமனம் முதல் தீவிர பிரசாரம் வரை! - Kumudam

இடைத்தேர்தல்.. படுவேகம் காட்டும் திமுக.. பொறுப்பாளர்கள் நியமனம் முதல் தீவிர பிரசாரம் வரை! – Kumudam

Date:

Related stories

லண்டன் டூ தாராபுரம்… கேப் விடாத விஜய்… கேண்டிடேட்டுக்காக சுடசுச பிரசாரம்..?

முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றுள்ள முதலமைச்சர் விஜய், அங்கு பணிகளை...

Mandaadi Movie Review : கரையில் கில்லாடி, கடலில் தள்ளாடி!

சூரி நடிப்பில் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் எப்படி...

ED உடன் கைக்கோர்க்கும் விஜிலென்ஸ்? நேருவுக்கு ‘Double ட்ரபிள்’?

தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக வலம் வரும் கே.என். நேருவைச்...

Mandadi Movie Review : கரையில் கில்லாடி, கடலில் தள்ளாடி!

சூரி நடிப்பில் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் எப்படி...
spot_imgspot_img



மதுராந்தகம் தொகுதியில் ஐ.பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் சுகன்யாவும் திமுக வேட்பாளர்களாக களமிறங்குகின்றனர்.

இரு தொகுதிகளிலும் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க திமுக சார்பில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மதுராந்தகம் (தனி) தொகுதிக்கு காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் க.சுந்தர் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தாராபுரம் (தனி) தொகுதிக்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் இல.பத்மநாபன் ஆகியோர் தேர்தல் பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், திமுகவின் பிரசாரத் திட்டமும் வேகம் எடுத்துள்ளது. வரும் 15ஆம் தேதி திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தவுடன், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி முதற்கட்ட பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து, செப்டம்பர் 25ஆம் தேதி முதல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இரு தொகுதிகளிலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here