back to top
16.7 C
London
Friday, July 31, 2026
No menu items!
Homeஅரசியல்"இனி தமிழகத்தில் நிரந்தரமாக விஜய் ஆட்சி தான்"... கரூரில் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேச்சு... - Kumudam

“இனி தமிழகத்தில் நிரந்தரமாக விஜய் ஆட்சி தான்”… கரூரில் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேச்சு… – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


கரூர் மக்கள் சந்திப்பு கூட்டத்தில்  எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெள்ளிவாளை முதலமைச்சருக்கு பரிசளித்த பிறகு பேசிய விஜயபாஸ்கர் வரலாற்று சிறப்புமிக்க கரூர் மாநகருக்கு சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு கட்சியின் தலைவராக வந்த தளபதி இன்று கரூர் மண்ணிலே தமிழ்நாட்டு முதலமைச்சராக கால் வைத்துள்ளார்.

அவரை கரூர் மாவட்ட மக்கள் சார்பாகவும் என்னோடு இந்த இயக்கத்திலேயே தங்களை அர்ப்பணித்துக்கொண்ட கழக நிர்வாகிகள் சார்பாகவும் வரவேற்கிறேன். தமிழகத்திலேயே ஒரு புரட்சியை ஏற்படுத்திய தலைவர் புரட்சி தலைவர் எம்ஜிஆர். 1972 ல் இயக்கம் ஆரம்பித்த போது அரசியல் நோக்கர்கள் விசில் அடிக்கிறவர்களே வைத்து அரசியல் கட்சயை நடத்த முடியுமா? என்று கேட்டார்கள். 

அவர்களுக்கு எல்லாம் பதில் எம்ஜிஆர் 1977ல் ஆட்சிக்கு வந்தார்கள். இதன் பின் திரையுலகில் இருந்து வந்தவர்களுக்கு ஆட்சி நடத்த  தெரியுமா? என்றனர். ஆனால் அதே புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தான் இருக்கின்ற வரை 3 முறை முதலமைச்சராக பதவியேற்று சரித்திர சாதனை படைத்தார்.

தற்போது உள்ள முதலமைச்சரும் அப்படி தான். புரட்சித்தலைவரின் அன்பும் புரட்சி தலைவி அம்மாவின் வீரமும் ஒன்று சேர்ந்த தலைவராக நம்முடைய புரட்சி தளபதி தமிழக முதலமைச்சரை தமிழகம் மட்டுமல்ல தமிழக மக்களே நேரில் காண்பதற்கு தவம் கிடக்கிறார்கள். 

விடியல் தருகிறோம் என்று சொன்னார்கள் ஆனால் அவர்களுக்கு மட்டுமே விடிந்தது. ஆனால் மக்களின் வாழ்வில் எந்த விடியலையும் தரவில்லை. தமிழகமே இனி விஜய்யின் கையில்தான் உள்ளது. இது உங்கள் காலம் தமிழகத்தில் நிரந்தரமாக விஜய்தான் ஆட்சியமைப்பார் என்று அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த எம்.ஆர்.பாஸ்கர் உரையாற்றியுள்ளார்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here