back to top
25.8 C
London
Monday, July 6, 2026
No menu items!
Homeசினிமாவட இந்தியாவில் ஒரு கலக்கு கலக்க வரும் தங்கலான்.... தேதியை அறிவித்த படக்குழு! - Kumudam

வட இந்தியாவில் ஒரு கலக்கு கலக்க வரும் தங்கலான்…. தேதியை அறிவித்த படக்குழு! – Kumudam

Date:

Related stories

போதைப்பொருளுடன் நடிகை சிக்கிய விவகாரம்-டீலர்கள் கைது 

நடிகை மீனாவுக்கு மெத்தபெட்டமைன் போதைப்பொருளை சப்ளை செய்த கோடம்பாக்கத்தைச் சேர்ந்த...

அமைச்சரின் வைரல் வீடியோ: முன்னாள் அமைச்சருக்கு இந்நாள் அமைச்சர் கேள்வி..!

முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷும், இந்நாள் கல்வித்துறை அமைச்சரான...
spot_imgspot_img


ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தங்கலான் திரைப்படம் சுதந்திர தின ஸ்பெஷலாக ஆக 15ம் தேதி வெளியானது. விக்ரம் உடன் பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர், ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். முதல் நாளில் இருந்தே தங்கலான் படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி புதிய முயற்சியாக தங்கலான் படத்தை இயக்கியிருந்தார் பா ரஞ்சித். இதனால் தங்கலான் அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.  

அதேநேரம் பா ரஞ்சித்தின் இந்த வித்தியாசமான முயற்சிக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்திருந்தனர். தங்கலான் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத சினிமா என்றும், பா ரஞ்சித்தின் திரைமொழி, மேக்கிங் புதிய அனுபவமாக இருந்தது எனவும் கூறியிருந்தனர். அதேபோல் சீயான் விக்ரம், பார்வதி, பசுபதி, மாளவிகா ஆகியோரின் நடிப்பும், ஜிவி பிரகாஷின் இசைக்கும் ரசிகர்களிடம் மிகப் பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. 

இந்நிலையில், கலவையான விமர்சனங்களுக்கு மத்தியிலும் தங்கலான் படத்தின் கலெக்ஷன் தரமாக இருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இத்திரைப்படம் முதல் நாளில் 26 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளில் 20 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக சொல்லப்பட்டது. வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் பாக்ஸ் ஆபிஸில் தங்கலானுக்கு நல்ல வசூல் கிடைத்துள்ளது.

அதன்படி, தங்கலான் திரைப்படம் முதல் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் 53.64 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஞாயிற்றுக் கிழமையான நேற்றும் தங்கலான் வசூல் மோசமாக இல்லை என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, முதல் வாரத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று, தங்கலான் 15 கோடி ரூபாய் வரை கலெக்ஷன் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்மூலம் தங்கலான் இதுவரை 65 முதல் 70 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. 

மேலும் படிக்க: “தமிழ் சினிமாவில் இது தரமான செய்கை..” சூரியின் கொட்டுக்காளி

உலகம் முழுவதுமே ‘தங்கலான்’ திரைப்படம் வெளியான நிலையில் வட இந்தியாவில் மட்டும் சில காரணங்களால் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் படக்குழு போஸ்டர் வெளியிட்டு இந்தியில் வெளியாகும் தேதியை அறிவித்துள்ளது. அதன்படி வருகிற 30ம் தேதி தங்கலான் திரைப்படம் வட இந்தியாவில் வெளியாகிறது. வட இந்தியாவிலும் விக்ரமுக்கு நிறைய ரசிகர்கள் இருப்பதால் அங்கேயும் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here