back to top
32.3 C
London
Monday, July 6, 2026
No menu items!
Homeஅரசியல்பாமக IN....விசிக OUT?தவெக கூட்டணியில் அதிரடி மாற்றம்? - Kumudam

பாமக IN….விசிக OUT?தவெக கூட்டணியில் அதிரடி மாற்றம்? – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



தமிழக வெற்றிக் கழகத்தில் சமீப காலமாக குதிரை பேரத்தின் மூலம் பல கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் நிர்வாகிகள் என கொத்து கொத்தாக பனையூரை நோக்கி படையெடுத்து வருவதாக கூறப்படும் நிலையில் தலைமைச் செயலகத்தில் என்ட்ரி கொடுத்துள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.

இந்நிலையில் அரசியல் களத்தில் மூத்த கட்சியின் தலைவராக இருக்கக் கூடிய திருமா மற்றும் அன்புமணி ஆகிய இருவரும் தவெகவில் இணைய போகிறார்களா? அடுத்த மூவ் என்னவாக இருக்கும் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இன்று மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சரான என்.ஆனந்தை சந்தித்து மனு அளிக்க சென்றிருந்தார் அன்புமணி. அப்போது அன்புமணியை தலைமைச் செயலகத்தில் தன்னுடைய அறையில் உள்ள தன்னுடைய நாற்காலியில் அமர வைத்து அழகு பார்த்தார் அமைச்சர் ஆனந்த். அமைச்சரின் இந்த செயல் பேசுப்பொருளான நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி தவெக அரசு குறித்து பாராட்டு மழை பொழிந்தார்.

இதனைத் தொடர்ந்து பாமகவும் தவெகவும் இணைக்கின்றதா என்ற கேள்வியை அரசியல் விமர்சகர்கள் எழுப்பி வருகின்றனர்.ஏற்கனவே திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளை தன் பக்கம் இழுத்தது தவெக.அடுத்ததாக என்டிஏ கூட்டணியை குறிவைக்கிறதா தவெக என்ற சந்தேகங்கள் எழுப்ப படுகின்றன.

தைலாபுரத்தில் உள்ள அப்பாவை சந்தித்து கண்ணீர் மல்கிய அன்புமணி பனையூருக்கு சென்று கட்சியை அடமானம் வைக்க போகிறாரா என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். இப்படி தவெக பாமக கூட்டணி தொடர்பான பேச்சுகள் அடிபடும் நிலையில் தவெகவுடன் கூட்டணி அமைத்து அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ள விசிக என்ன முடிவு எடுக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.ஏற்கனவே திமுக கூட்டணியில் இருந்த போதே பாமக இருக்கும் இடத்தில் விசிக இருக்காது என்று திட்டவட்டமாக கூறியிருந்தார் திருமாவளவன்.

அதாவது எந்த கூட்டணியில் பாமக இருக்கிறதோ அந்த கூட்டணியில் விசிக இருக்காது என்ற நிலைப்பாட்டில் திருமாவளவன் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.இத்தகைய சூழலில் ஒரு வேளை பாமக தவெக கூட்டணி அமைக்கும பட்சத்தில் அக்கூட்டணியில் விசிக இடம்பெறுமா? அமைச்சரவையில் தொடர்ந்து நீடிக்குமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விருதுகள் வழங்கும் விழா சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இதில் பேசிய திருமா தவெக வெற்றி பெற்றது எங்களுக்கு உடன்பாடில்லை ஏனென்றால் நாங்கள் தான் திமுக சார்பில் போட்டியிட்டோம் எங்களுக்கு இதில் எப்படி மகிழ்ச்சி இருக்கும் என்று பேசியதோடு திமுக கூட்டணியில் விசிக இல்லை என திமுக தலைமையே கூறிவிட்டது என்று கூறியிருந்தார்.

அவரின் பேச்சு பேசுபொருளான நிலையில் தற்போது தவெக கூட்டணியில் பாமக இணைய போவதாக கூறப்படுவதால் திருமாவளவன் எடுக்க போகும் முடிவு என்ன என்று அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது.தவெக பாமக கூட்டணியில் அமைந்தால் அக்கூட்டணியை விட்டு விசிக வெளியேறுமா? வெளியேறி திமுகவுடன் மீண்டும் இணையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here