back to top
13.2 C
London
Thursday, September 24, 2026
No menu items!
Homeசினிமாஇயக்குநர் இமயம் சரிந்தது: பாரதிராஜா மறைவு, திரையுலகினர் சோகம்  - Kumudam

இயக்குநர் இமயம் சரிந்தது: பாரதிராஜா மறைவு, திரையுலகினர் சோகம்  – Kumudam

Date:

Related stories

துணை முதல்வர் ஆஃபர்… பேரம் பேசிய ஆதவ்… புட்டுப் புட்டு வைத்த சீமான்! – Kumudam

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும்...

பட்டினப்பாக்கத்துக்கு குட் பை ? அடுத்தடுத்த எதிர்ப்புகள் ! அந்தர்பல்டி அடித்த விஜய் ?

மீனவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை தொடர்ந்து பட்டினப்பாக்கம் புதிய...
spot_imgspot_img



தமிழ் சினிமாவின் இயக்குநர் இமயம் என பாரதிராஜா அழைக்கப்பட்டார். கிராமத்து மண்வாசனை கலந்த கதைகளை தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்த பெருமை பாரதிராஜாவை சாரும்.  இதுவரை 44 திரைப்படங்களை இயக்கியுள்ள பாரதிராஜா. திரையுலகில் முடிசூடா மன்னாக திகழ்ந்து வந்தவர்.  மகன் மனோஜின் அகால மரணம் பாரதிராஜாவை மனதளவிலும் உடலளவிலும் பாதித்தது.  நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று இயற்கை எய்தியுள்ளார். 

கடந்த சில ஆண்டுகளாகப் படங்களில் தீவிரமாக நடித்து வந்த பாரதிராஜா, மகனின் இழப்பைத் தாங்க முடியாமல் முற்றிலுமாக முடங்கிப் போனார். சில மாதங்கள் மலேசியாவில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வந்தார். கடந்த டிசம்பர் இறுதியில் சென்னை திரும்பிய அவருக்குக் கடுமையான நுரையீரல் தொற்று மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. 

இதன் காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நீண்ட நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் நிபுணர் குழுவின் கண்காணிப்பில் இருந்ததற்கு பின் வீடு திரும்பினார். ஆனால் வீட்டிலும் தனிப்பட்ட முறையில் சிகிச்சையில் இருந்துவந்தார்.

இந்நிலையில், உடல் நல பாதிப்பு காரணமாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த பாரதிராஜா இன்று காலமானார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகினர், பொதுமக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here