back to top
11.3 C
London
Thursday, September 24, 2026
No menu items!
Homeஅரசியல்துணை முதல்வர் ஆஃபர்… பேரம் பேசிய ஆதவ்… புட்டுப் புட்டு வைத்த சீமான்! - Kumudam

துணை முதல்வர் ஆஃபர்… பேரம் பேசிய ஆதவ்… புட்டுப் புட்டு வைத்த சீமான்! – Kumudam

Date:

Related stories

பட்டினப்பாக்கத்துக்கு குட் பை ? அடுத்தடுத்த எதிர்ப்புகள் ! அந்தர்பல்டி அடித்த விஜய் ?

மீனவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை தொடர்ந்து பட்டினப்பாக்கம் புதிய...

மீண்டும் உருவெடுக்கும் ஊழல் வழக்கு…மோடி கையில் வேலுமணியின் வாழ்வு?

அதிமுக மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு...
spot_imgspot_img



தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 6-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில், தாராபுரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கார்த்திகாவை ஆதரித்து நேற்று (23.09.2026) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் சீமான் பேசினார். அப்போது அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தவர்கள் குறித்து கேள்வி எழுப்பிய அவர்,

“அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிaபெற்ற சத்தியபாமா எதற்காக பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்? இதுகுறித்து யாராவது கேள்வி கேட்டார்களா? மக்களாகிய நீங்கள் தான் கேட்க வேண்டும். நாங்கள் உங்களுக்கு வாக்களித்து எம்எல்ஏ பதவி கொடுத்தோம். அப்படியிருக்கும்போது எதற்காக கட்சியை விட்டு விலகினீர்கள் என்று கேட்க வேண்டும்” என்றார். மேலும், “கட்சித் தாவல் முடிவை ஏன் எடுத்தார்கள்? அதற்கான அவசியம் என்ன? மீண்டும் அதே பதவிக்கு போட்டியிட வேண்டிய தேவை என்ன?” என அடுத்தடுத்து கேள்விகளை முன்வைத்தார்.

“விஜய் வாஷிங் மெஷின் வைத்திருக்கிறாரா?” – சீமான் கேள்வி

தொடர்ந்து பேசிய சீமான், “திமுகவை ஊழல் சக்தி, தீய சக்தி என்று விமர்சித்து வந்தவர்கள், அந்தக் கட்சியில் இருந்து வெற்றி பெற்றவர்களை சேர்த்துக்கொண்டு ஆட்சி அமைக்கிறார்கள். ஊழல் சக்தி என்று கூறப்பட்ட கட்சியில் இருந்து வந்தவர்களை இணைத்துக்கொண்டு தேர்தலை சந்திக்கிறார்கள். அவரிடம் சென்றால் என்ன? விஜய் வாஷிங் மெஷின் வைத்திருக்கிறாரா? அனைவரையும் துவைத்து தூய்மைப்படுத்திவிடுவாரா?” என்று விமர்சித்தார்.

காங்கிரஸ் கூட்டணி குறித்து விஜய்க்கு கேள்வி

காங்கிரஸ் கூட்டணி குறித்து பேசிய சீமான், “ஒரு விஷயத்தில் விஜய்யை பாராட்ட வேண்டும். நான் மற்றும் என் தம்பி வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்தோம். அவர்தான் வாகனத்தை ஓட்டினார். அப்போது திடீரென, ‘அண்ணா, காங்கிரஸையும் சேர்த்துக்கொள்ளலாமா?’ என்று கேட்டார். அதற்கு நான், ‘காங்கிரஸை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற யோசனையை யார் சொன்னது?’ என்று கேட்டேன். 

காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு எந்த அரசியலை மக்களிடம் முன்வைப்பீர்கள்? கச்சத்தீவு பிரச்சனையை பேச முடியுமா? காவிரி உரிமையை பேச முடியுமா? மொழிக் கொள்கையை பேச முடியுமா? ஈழ விடுதலை குறித்து பேச முடியுமா?” என்றார்.

ஊழல் ஒழிப்பு குறித்து சீமான் கருத்து

“ஊழல், லஞ்சத்தை எப்படி ஒழிப்பது என்று விஜய் கேட்டது எனக்கு பிடித்திருந்தது. அவரிடம் ஒரு நோக்கம் இருக்கிறது. ஊழல், லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால், அவரே ரூ.100 கோடி வரி பாக்கி தொடர்பாக சிபிஐ வழக்கு இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?” என சீமான் கேள்வி எழுப்பினார்.

பிளாக் டிக்கெட் விவகாரம்

“பிளாக் டிக்கெட் விற்றவர்கள் எங்களிடம் திரள்நிதி குறித்து கேள்வி கேட்கிறார்கள். முதலமைச்சராக இல்லாதபோது பிளாக்கில் டிக்கெட் விற்பனை நடந்ததாக கூறப்படுகிறது. இப்போது முதலமைச்சராக வந்த பிறகு அதனை தடுக்க வேண்டாமா? அப்படியிருக்கும்போது ஊழலை எப்படி ஒழிப்பீர்கள்?” என்றார்.

மேலும், “எங்கள் அப்பா நல்லசாமி, கள் இறக்குவோர் சங்கத்தின் தலைவர். ‘கள் உணவின் ஒரு பகுதி அல்ல, அது மது என்று நிரூபித்தால் ஒரு கோடி ரூபாய் தருகிறேன்’ என்று பல ஆண்டுகளாக கூறி வருகிறார். இதுவரை யாரும் அதை நிரூபிக்கவில்லை” என்றார்.

விவசாயிகள் ஆதரவு குறித்து வருத்தம்

“விவசாய குடும்பத்தில் பிறந்த நாங்கள், அனைத்து விவசாயப் போராட்டங்களிலும் விவசாயிகளுடன் நின்றோம். ஆனால் எந்த விவசாயியும் எங்களுக்கு வாக்களிக்கவில்லை. விவசாயி சின்னத்துக்கே வாக்களிக்கவில்லை என்பதுதான் எங்களுடைய வருத்தம்” என தெரிவித்தார்.

போராட்டங்களுக்கு அழைப்பதில்லை

“முன்பெல்லாம் பிரச்சனை என்றால் மக்கள் என்னிடம் வந்து மனு கொடுப்பார்கள். போராட்டம் நடத்த சொல்லி அழைப்பார்கள். செவிலியர், மருத்துவர், ஆசிரியர், மீனவர், மாணவர் என பல்வேறு போராட்டங்களில் நாங்கள் பங்கேற்றோம். ஆனால் எங்களுடன் மக்கள் நிற்கவில்லை. பிரச்சனையை உருவாக்கியவர்களுக்கே மீண்டும் மீண்டும் மக்கள் வலிமை கொடுக்கிறார்கள்” என்றார்.

சட்டம் ஒழுங்கு குறித்து விமர்சனம்

சட்டம் ஒழுங்கு குறித்து பேசிய சீமான், “சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி கேட்டால், மூன்று நாட்கள் கழித்து எழுதிக் கொண்டு வந்து பதில் சொல்லக்கூடாது. கொலைகள், பாலியல் வன்கொடுமைகள், காவல்துறை மரணங்கள், காவல் நிலைய மரணங்கள் நடைபெறும்போது அரசு கவனம் செலுத்த வேண்டும். ‘இது தொடக்க நிலைதான். இனி குற்றங்கள் குறைக்கப்படும்’ என்று பதில் சொல்ல வேண்டும். சட்டசபையில் ‘காட்டு, காட்டு’ என்று சினிமா பஞ்ச் வசனம் பேச முடியாது” என்றார்.

மேலும், “கடந்த ஆட்சியில் அமைச்சர்கள் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கான கோப்புகள் இருப்பதாக கூறினால், அதில் நடவடிக்கை எடுப்பார்கள் என்று பார்த்தால், பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சர்க்காரியா கமிஷன் குறித்து பேசுகிறார்கள்” என விமர்சித்தார்.

“15 ஆண்டுகளாக கட்டிய அரசியலை விஜய் அறுவடை செய்துவிட்டார்”

“நாங்கள் 15 ஆண்டுகளாக திராவிட கட்சிகளுக்கு எதிரான அரசியலை கட்டமைத்து வந்தோம். அதை விஜய் வந்து அறுவடை செய்துவிட்டார். ஆட்சியில் நீங்களும் வாழுங்கள்; நானும் வாழ்கிறேன். ஆனால் ஒருநாள் மக்கள் பிரச்சனைகளுக்காக சாலையில் இறங்கி போராட வேண்டிய நிலை வந்தால், நாங்கள் விசில் ஊதிக்கொண்டே இருப்போம்” என்றார்.

துணை முதலமைச்சர் பதவி பேரம் குறித்து சீமான் குற்றச்சாட்டு

தொடர்ந்து பேசிய சீமான்,

“இப்போது இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர்கள் விசில் சின்னத்தில் நிற்கிறார்கள். இந்த தேர்தல் ஒரு தனி மனிதரின் விருப்பத்திற்காக நடக்கிறதா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவருக்கும், தற்போது தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக நிற்பவருக்கும் என்ன வித்தியாசம்?” என்றார்.

மேலும், “திடீரென ஆதவ் அர்ஜூனா என்னை தொடர்புகொண்டு, ‘எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் உங்களுக்கு துணை முதலமைச்சர் பதவி தருகிறோம் என்றும் பேரம் பேசினார் என்றும் கூறினார். அதற்கு சம்மதிக்கவில்லை என்றதும், உங்கள் அண்ணியை வேளாண்துறை அமைச்சராக்கலாம் என்று பேச்சு நடத்துகிறார்கள். தமிழக வெற்றிக் கழகத்தில் இருப்பவர்களுக்கு கொள்கை என்று ஒன்றும் இல்லை” என சீமான் தெரிவித்தார்.

இந்த துணை முதலமைச்சர் பதவிக்காக ஆதவ் அர்ஜூனா பேரம் பேசியதை தெரிவித்த சீமான், இந்த கருத்தால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here