back to top
14.1 C
London
Saturday, June 6, 2026
No menu items!
Homeசினிமாவிவாகரத்து வழக்கு- ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆஜர் - Kumudam

விவாகரத்து வழக்கு- ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆஜர் – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



நடிகர் தனுஷ் உடனான விவாகரத்து வழக்கில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜரானார்.

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா விவகாரத்து கோரிய வழக்கில் இருவரும் கடந்த முறை ஆஜராகததால் வழக்கின் விசாரணை இன்று (நவ.21ம் தேதி)தள்ளி வைத்து சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இயக்குநர் கஸ்தூரிராஜாவின் இளைய மகன் நடிகர் தனுஷுக்கும், நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி சென்னையில் திருமணம் நடந்தது.இதில் ஏரளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த தம்பதிக்கு லிங்கா , யாத்ரா என இரு மகன்கள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு ஐஸ்வர்யா திரைப்படங்களை இயக்கி வந்தார். மேலும் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருவரும் கவனம் பெற்றனர். இந்த நிலையில்  2 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரியப்போவதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டனர்.

இருவரும் பரஸ்பரத்துடன் பிரிவதாக அறிக்கை வெளியிட்டனர்.இதனால் ரஜினி மற்றும் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து ஐஸ்வர்யா மற்றும் தனுஷை சமாதானம் செய்யும் முயற்சிகள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்தனர்.இந்த நிலையில் இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில் 2004ம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர்.

இந்த மனு முதன்மை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுபாதேவி முன் நவ.3ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் ஆஜராகவில்லை.  இதையடுத்து வழக்கின் விசாரணை நவம்பர் 21ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. விவகாரத்து கோரிய வழக்கில் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் மூன்றாவது முறையாக ஆஜராகவில்லை என்பதால் விசாரணை மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த விசாரணைக்கு இருவரும் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டது. இந்த நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ( நவ.21ம் தேதி )இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here