back to top
19.9 C
London
Saturday, September 26, 2026
No menu items!
Homeஅரசியல்ஜூன் 4-ம் தேதி பிறந்தநாளில் புதிய கட்சி அறிவிப்பை வெளியிடும் அண்ணாமலை ? - Kumudam

ஜூன் 4-ம் தேதி பிறந்தநாளில் புதிய கட்சி அறிவிப்பை வெளியிடும் அண்ணாமலை ? – Kumudam

Date:

Related stories

படம் ஆரம்பிக்கிறதுக்குள்ளயே பிரச்னை… தனுஷ் ‘D56’ பூஜையில் என்ன நடந்தது? 

தனுஷின் ‘D56’ படத்தின் பூஜை மாரநாடு கருப்பண்ணசாமி கோயிலில் நடைபெற்ற...

ONE SUN.. ONE MOON.. ‘ஜெயிலர் 2’ படத்தின் SECOND SINGLE வெளியானது!

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 'ஜெயிலர் 2' படத்தின் 'ஒன்...
spot_imgspot_img



சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்க அண்ணாமலை தலைவர் பதவி பறிக்கப்பட்டது. சட்டமன்ற தேர்தல் பணிக்குழுவிலிருந்து விலகி இருந்த அண்ணாமலை, தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்காமல் அதிருப்தியில் இருந்தால். அதுமட்டுமின்றி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனுவும் கூட அண்ணாமலை தாக்கல் செய்யவில்லை. 

இதனிடையே சிங்கநல்லூர் தொகுதியை அதிமுகவிடம் கேட்டு பெற்று அங்கு அண்ணாமலை போட்டியிட வைக்க பாஜக தலைமை முயற்சி மேற்கொண்டது. ஆனால் அதிமுக சிங்காநல்லூர் தொகுதியை ஒதுக்க முன்வரவில்லை. இதனால் தேர்தல் பிரசாரத்தில் மட்டுமே அண்ணாமலை ஈடுபட்டார். இந்த நிலையில், ராஜ்யசபா எம்பி, மத்திய அமைச்சர் பதவியை எதிர்பார்த்து எடப்பாடி காத்து இருந்தார். 

ஆனால் டெல்லி பாஜக அண்ணாமலையை கண்டு கொள்ளவில்லை. இதனிடையே புதிய கட்சி ஐடியாவில் மீண்டும் தூசி தட்டி அண்ணாமலை கையில் எடுத்துள்ளார். பாஜக மாவட்ட தலைவர்கள் பெரும்பாலனரிடம் அண்ணாமலை ஆதரவாளர்கள் புதிய கட்சியில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். ஜூன் 4-ம் தேதி தனது பிறந்தநாளில் புதிய கட்சி அறிவிப்பை அண்ணாமலை வெளியிட உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

புதிய கட்சி அண்ணாமலை தொடங்கபட உள்ள தகவல் டெல்லி பாஜக தலைமைக்கு தெரிய வந்தது. இதை தொடர்ந்து அண்ணாமலையை சமாதானப்படுத்தும் முயற்சியில் டெல்லி தலைமை ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் மேலிட அழைப்பை ஏற்று அண்ணாமலை டெல்லி விரைந்துள்ளார். கட்சி தலைமையின் சமாதானத்தை ஏற்று புதிய கட்சி அறிவிப்பை அண்ணாமலை தள்ளி வைப்பாரா அல்லது 4-ம் தேதி அறிவிப்பாரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here