back to top
29.8 C
London
Wednesday, August 12, 2026
No menu items!
Homeஅரசியல்ரூ 82 லட்சம் சொத்து வரி பாக்கி, ஜெயலலிதா வீட்டிற்கு மாநகராட்சி சீல்  - Kumudam

ரூ 82 லட்சம் சொத்து வரி பாக்கி, ஜெயலலிதா வீட்டிற்கு மாநகராட்சி சீல்  – Kumudam

Date:

Related stories

என்னது சூரியனுக்கே வேர்த்திருச்சா?… சட்டசபையில் நடந்த ‘Science Comedy’!

இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் வேளாண் அமைச்சர் வினோத் பேசும்போது,...

FAIR DELIMITATION: விஜய்யின் தனித்தீர்மானத்தில் இருக்குற  3 விஷயத்த கவனிச்சீங்களா?

தொகுதி மறுவரையறை தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் கொண்டு...

என்னது “மன்மத நன்றி”யா?… வைரலாகும் தவெக எம்.எல்.ஏ வீடியோ..!

கவுண்டம்பாளையம் தொகுதி தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷின்...

ஹூட்டிங்கின்போதே இறந்த தாய்.. ஷூட்டிங்கை தொடர்ந்த ராதிகா… நெகிழ்ந்த சூர்யா..!

நடிகை ராதிகா சரத்குமார் தனது தாயார் கீதா ராதாவின் மறைவுச்...
spot_imgspot_img


ஹைதராபாத் ஸ்ரீநகர் காலனியில் உள்ள ஜெயலலிதாவிற்குச் சொந்தமான நான்கு மாடி கட்டிடம் (G+4), நீண்ட நாட்களாகச் சொத்து வரி செலுத்தப்படாததால் அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளது. 2017-ஆம் ஆண்டு முதல் இதற்கான வரி நிலுவையில் உள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டிடத்திற்கு 2017 முதல் வரி செலுத்தாததால், கடந்த பிப்ரவரி மாதம் மாநகராட்சி துணை ஆணையர் சுரேஷ், ஜெயலலிதாவின் வாரிசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். ஆனால், அதற்கு எவ்வித பதிலும் வராத நிலையில், நேற்று அதிகாரிகள் அந்த கட்டிடத்திற்குச் சென்று சீல் வைத்தனர்.

மாநகராட்சியின் ஒருமுறை தீர்வு திட்டத்தின் (OTS) கீழ் மார்ச் 31-ஆம் தேதி வரை சலுகை வழங்கப்பட்ட பின்னரும், சுமார் ரூ. 82,91,822 வரி நிலுவையில் உள்ளது. இந்தக் கட்டிடம் முன்பு வணிக ரீதியாகப் பயன்படுத்தப்பட்டதால் அதிக வரி விதிக்கப்பட்டது. 

ஆனால், 2017 முதல் இது குடியிருப்புப் பகுதியாக மாற்றப்பட்டதால், வரியைக் குறைக்க வேண்டும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஜெயகுமார் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதாவின் வீடு சீல் வைக்கப்பட்டு இருக்கும் சம்பவம் அதிமுக தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here