back to top
10.6 C
London
Wednesday, October 21, 2026
No menu items!
Homeஅரசியல்விஜய் எடுத்த முடிவு...டெல்லி போட்ட உத்தரவா? எழும் புதிய கேள்விகள்! - Kumudam

விஜய் எடுத்த முடிவு…டெல்லி போட்ட உத்தரவா? எழும் புதிய கேள்விகள்! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதிய பசுமைவழி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு ஒருபுறம் பரந்தூர் மற்றும் ஏகனாபுரம் பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில், மறுபுறம் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதன் பின்னணி குறித்து அரசியல் ரீதியாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

110-வது விதியின் கீழ் சட்டப்பேரவையில் பேசியபோது முதலமைச்சர் விஜய், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் கைவிடப்படும் என அறிவித்தார். விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான மாற்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தேர்வு செய்யப்பட்ட மாற்று இடங்களின் தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் குறித்து சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, புதிய விமான நிலையத்துக்கான இடம் விரைவில் இறுதி செய்யப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஏகனாபுரம் கிராம மக்கள் மற்றும் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

டெல்லி உத்தரவா? புதிய கேள்வி

இந்நிலையில், பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்ட முடிவைச் சுற்றி புதிய அரசியல் சர்ச்சை உருவாகியுள்ளது. குறிப்பாக, “டெல்லியில் இருந்து வந்த உத்தரவின் அடிப்படையில்தான் பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதா?” என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

மேலும், சென்னை விமான நிலையத்தின் தனியார்மய நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் வகையிலேயே பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதா என்றும் அரசியல் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

அதாவது, பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டதன் மூலம், ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள சென்னை விமான நிலையத்தைத் தனியார் பங்களிப்பு அல்லது தனியார் நிர்வாகத்துக்கு கொண்டு செல்வதற்கான வாய்ப்பு உருவாக்கப்படுகிறதா என்ற கேள்வியும் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

இதன் பின்னணியில், “இந்த முடிவை எடுத்தது யார்? இந்த முடிவால் உண்மையில் யாருக்கு பயன்?” என்ற கேள்விகளும் அரசியல் களத்தில் முன்வைக்கப்பட்டு வருகின்றன.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here