back to top
12.6 C
London
Monday, October 19, 2026
No menu items!
Homeஅரசியல்“Reel விடுவதுதான் தவெகவின் DNA-வா?” கீர்த்தனாவைச் சாடிய திமுக மகளிரணி! - Kumudam

“Reel விடுவதுதான் தவெகவின் DNA-வா?” கீர்த்தனாவைச் சாடிய திமுக மகளிரணி! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


சென்னையில் நேற்று (அக்.,-18) நடைபெற்ற திமுக மகளிரணி பொதுக்கூட்டத்தில், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது மேடையில் பேசிய திமுக மகளிரணி நிர்வாகி ஒருவர், முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாக விமர்சனங்கள் எழுந்தன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் கீர்த்தனா அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், மேடை நாகரிகம் இல்லாமல் முதலமைச்சர் விஜய் குறித்து தரக்குறைவாகப் பேசியதாகக் குற்றம்சாட்டிய அவர், கனிமொழி மற்றும் மேயர் பிரியா ஆகியோர் இதைக் கண்டிக்காதது குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தார்.

அமைச்சர் கீர்த்தனாவின் விமர்சனத்துக்குத் திமுக மகளிரணி கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதற்குப் பதிலளித்து திமுக மகளிரணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”தவெகவினர் பொய்களைப் பரப்புவதை முதலில் நிறுத்த வேண்டும்!!

மேடையில் தரம் தாழ்ந்து பேசியதைக் கண்டித்து, தவறு நடந்தது தன் சொந்தக் கட்சி மேடையாக இருந்தாலும், ‘எதிராளி தரம் குறைந்து பேசினாலும் நம் திராவிட இயக்கத் தரம் குறையக் கூடாது‘ என அங்கேயே அக்கா கனிமொழி அவர்களும், முன்னாள் அமைச்சர் திரு. சேகர்பாபு அவர்களும் தட்டிக் கேட்டிருக்கிறார்கள்.

நடந்தது என்னவென்று தெரிந்தும், உண்மையைத் திரித்துப் பொய்யான பிம்பத்தை உருவாக்க முயற்சிப்பது ஏன்? உண்மையை மறைக்கப் பொய் கதைகளைப் பரப்பாதீர்கள். தவறைத் தட்டிக் கேட்கும் இந்த நேர்மையும், அரசியல் நாகரிகமும் தான் திராவிட இயக்கத்தின் அடையாளம்!

Reel விடுவதும்… Reel எடுப்பதும் தான் தவெக வின் DNA-வா? என்று தவெக அமைச்சர்களான கீர்த்தனா,ஜெகதீஸ்வரி,கனிமொழி ஆகியோரிடம் திமுக மகளிரணி கேள்வி எழுப்பியுள்ளது.

எங்கு பிரச்சினை நடந்தாலும், உண்மையைச் சரிபார்க்காமல், யாரோ பகிர்ந்த வீடியோக்களை அப்படியே பதிவிட்டு, அதைத் தங்களுக்குச் சாதகமான கதையாக மாற்றிப் பரப்புவதுதான் உங்கள் அரசியலா? உயர் பதவியில் இருக்கும் நீங்கள், ரூட் மாஃபியாவின் போலிப் பிரச்சாரக் கணக்குகளாக மாறிவிட்டீர்களா?

அடுத்தவர்களின் பேச்சைக் குறை சொல்வதற்கு முன்பு, உங்கள் அமைச்சர்களும் தலைவர்களும் மேடைதோறும் பேசும் பேச்சுகளையும், அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளையும் ஒருமுறை திரும்பிப் பாருங்கள். உங்கள் தரப்பில் என்ன நடக்கிறது என்பதையும் சுயபரிசோதனை செய்யுங்கள். பெண்களை அரசியலில் முன்னிலைப்படுத்துவதாகச் சொல்லிவிட்டு, பெண் தலைவர்களை வெறும் Paid Influencer கணக்குகளாகச் சுருக்கிவிடுவதுதான் உங்கள் அரசியலா? ”என்று கண்டனம் தெரிவித்துள்ளது.

 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here