back to top
12.2 C
London
Monday, October 19, 2026
No menu items!
Homeசினிமா75 வயதிலும் BOX OFFICE KING... Jailer 2 நான்கு நாளில் ரூ.424 கோடி வசூல்.....

75 வயதிலும் BOX OFFICE KING… Jailer 2 நான்கு நாளில் ரூ.424 கோடி வசூல்.. மீண்டும் மாஸ் காட்டிய ரஜினி! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த அக்டோபர் 15-ம் தேதி வெளியான ஜெயிலர் 2, திரையரங்குகளில் வசூல் வேட்டையை நடத்தி வருகிறது. படத்தின் முதல் நான்கு நாள் வசூல் மட்டுமே ரூ. 424 கோடியைத் தாண்டியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், ரஜினியின் பாக்ஸ் ஆபீஸ் செல்வாக்கு மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

முதல் வார இறுதியிலேயே ரூ. 424 கோடி!

ஜெயிலர் 2 திரைப்படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. முதல் நாளில் இந்தியாவில் ரூ. 59.70 கோடி நிகர வசூல் செய்த இப்படம், வெள்ளிக்கிழமை ரூ. 37.10 கோடி வசூலித்தது. அதைத் தொடர்ந்து சனிக்கிழமை ரூ. 47.25 கோடியும், ஞாயிற்றுக்கிழமை ரூ. 55.85 கோடியும் வசூலித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் இந்தியாவில் நான்கு நாட்களில் ரூ. 199.90 கோடி நிகர வசூலைப் பெற்றுள்ளது. இந்தியாவில் மொத்த வசூல் ரூ. 234.25 கோடியாகவும், வெளிநாடுகளில் ரூ. 190 கோடியாகவும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் உலகளாவிய வசூல் ரூ. 424.25 கோடியை எட்டியுள்ளது.

முக்கியமாக, முதல் வார இறுதியில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படம் என்ற சாதனையையும் ஜெயிலர் 2 படைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு முன்பு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி திரைப்படம் முதல் வார இறுதியில் ரூ. 371 கோடி வசூலித்து சாதனை படைத்திருந்தது. தற்போது அந்தச் சாதனையையும் ஜெயிலர் 2 முறியடித்துள்ளது.

75 வயதிலும் தொடரும் சூப்பர் ஸ்டாரின் ராஜ்ஜியம்!

இன்றைய சினிமா உலகில் ஒவ்வொரு படத்தின் வசூலும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. இளம் நடிகர்களின் படங்கள் பெரிய வசூலைப் பெறும்போது அது பேசப்படுகிறது. ஆனால், 75 வயதிலும் ஒரு நடிகரின் படத்துக்காக ரசிகர்கள் திரையரங்குகளில் திரள்வதும், அவரது படங்கள் வசூல் சாதனைகளைப் படைப்பதும் தனித்துவமான விஷயம்தான்.

அந்த வகையில், ரஜினிகாந்தின் திரை ஆளுமையும் ரசிகர்களிடம் அவருக்கு இருக்கும் செல்வாக்கும் மீண்டும் கவனம் பெற்றுள்ளன. ஜெயிலர் 2 படத்தின் முதல் வார இறுதி வசூல், சூப்பர் ஸ்டார் மீதான எதிர்பார்ப்பு இன்னும் குறையவில்லை என்பதைக் காட்டுகிறது.

2023-ம் ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படம் உலகளவில் சுமார் ரூ. 600 கோடி வசூலித்ததாகக் கூறப்படும் நிலையில், அதன் இரண்டாம் பாகம் அந்த வசூலை மிஞ்சுமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இன்றைய தலைமுறை நடிகர்களுடன் போட்டி போடும் வயதில் ரஜினி இல்லை. ஆனால், பாக்ஸ் ஆபீஸில் யாருடன் வேண்டுமானாலும் போட்டி போடத் தயாராக இருக்கிறார் என்பதை அவரது படத்தின் வசூல் உணர்த்துகிறது.

ரூ. 500 கோடியை நோக்கி ஜெயிலர் 2!

தசரா மற்றும் பூஜை விடுமுறை நாட்கள் படத்தின் வசூலுக்கு மேலும் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் ஏற்கெனவே ரூ. 400 கோடியைக் கடந்துள்ள ஜெயிலர் 2, விரைவில் ரூ. 500 கோடி வசூல் மைல்கல்லை எட்டுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன், எஸ்.ஜே. சூர்யா, மிதுன் சக்ரவர்த்தி, சூரஜ் வெஞ்சரமூடு, வித்யா பாலன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் சிறப்புத் தோற்றங்களில் இடம்பெற்றுள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

விமர்சன்ங்களை அடித்து நொறுக்கிய தலைவர்..!

“பாரடைஸ், டாக்ஸிக் படங்களே பாக்ஸ் ஆபீஸில் கல்லா கட்ட முடியவில்லை… 75 வயதில் ஒருவர் ஸ்லோ மோஷனில் நடந்து வருகிறார்; இவரால் எப்படி பாக்ஸ் ஆபீஸில் வசூல் செய்ய முடியும்?”

“தமிழ் சினிமாவில் இரண்டாம் பாகங்களுக்கு எப்போதுமே பெரிய வரவேற்பு கிடைக்காது. அப்படியிருக்க, ஜெயிலர் 2 மட்டும் எப்படி வெற்றி பெறும்? ரஜினியை இனியாவது ஓய்வெடுக்கச் சொல்லுங்கள். வயதாகிவிட்டது… சண்டை போட முடியாது, டான்ஸ் ஆட முடியாது!”

இப்படியான விமர்சனங்களும் கேள்விகளும் ரஜினிகாந்தைச் சுற்றி எழுந்துகொண்டே இருந்தன. ஆனால், இத்தனை விமர்சனங்களுக்கும் தனது படத்தின் வசூல் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார் சூப்பர் ஸ்டார். 

இன்றைக்கும், என்றைக்கும் பாக்ஸ் ஆபீஸில் தனக்கென ஒரு தனி இடம் உண்டு என்பதை உணர்த்தியிருக்கும் இந்த 75 வயது இளம் நடிகரை என்னவென்று சொல்வது?

“50 வருஷமா என்னை அழிக்க ட்ரை பண்றாங்க!”

ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்த் பேசும், “50 வருஷமா என்னை யார் யாரோ அழிக்க ட்ரை பண்ணி, யாராலையும் முடியல” என்ற வசனம், அவரது நீண்ட திரைப்பயணத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது கூடுதல் கவனம் பெறுகிறது.

திரையுலகில் ஐந்து தசாப்தங்களைக் கடந்தும் ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தக்கவைத்திருப்பது சாதாரண விஷயமல்ல. தலைமுறைகள் மாறினாலும், ரசனைகள் மாறினாலும், ரஜினியின் ஸ்டைலுக்கும் திரை ஆளுமைக்கும் இருக்கும் வரவேற்பு தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.

வயது காரணமாக இனி ரஜினியால் பழையபடி நடிக்க முடியாது என்று விமர்சித்தவர்களுக்கு, அவரது படத்தின் வசூல் தற்போது பதிலாக அமைந்துள்ளது. அதேநேரத்தில், ரஜினியின் வெற்றியை அவரது வயதுடன் மட்டும் சுருக்கிவிட முடியாது. பல ஆண்டுகளாக அவர் உருவாக்கி வைத்திருக்கும் ரசிகர் பட்டாளம், திரையில் அவரது ஒவ்வொரு அசைவுக்கும் கிடைக்கும் வரவேற்பு, படத்தின் மீதான எதிர்பார்ப்பு எனப் பல காரணங்கள் இதில் அடங்கியுள்ளன.

ரஜினி என்றால் ரஜினிதான்!

ஒரு நடிகரின் வெற்றியைத் தீர்மானிப்பது அவரது வயதா, நடிப்பா, ரசிகர்களின் ஆதரவா என்ற விவாதங்கள் ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், 75 வயதிலும் ஒரு நடிகரின் படம் வெளியானால் அதன் வசூலை ஒட்டுமொத்தத் திரையுலகமும் கவனிக்கிறது என்றால், அதற்குப் பின்னால் இருக்கும் செல்வாக்கை மறுக்க முடியாது.

ஜெயிலர் 2 படத்தின் வசூல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அடுத்தடுத்த நாட்களில் படம் எத்தகைய சாதனைகளைப் படைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

“ரஜினி இனி ஓய்வெடுக்க வேண்டும்” என்று சொன்னவர்களுக்குத் தனது பாணியில் பதிலளித்திருக்கிறார் சூப்பர் ஸ்டார். திரையில் அவர் நடந்து வரும் வேகத்தைவிட, பாக்ஸ் ஆபீஸில் அவரது படம் ஓடும் வேகம் அதிகமாக இருக்கிறது என்பதுதான் இப்போது ரசிகர்களின் கொண்டாட்டம்!

வயது 75… ஆனால், திரையில் இன்னும் அதே ஸ்டைல்… விமர்சனங்கள் எத்தனை வந்தாலும், ரஜினி என்ற பெயருக்கான எதிர்பார்ப்பு மட்டும் குறையவில்லை. சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது வெறும் பெயரல்ல. அது பல தசாப்தங்களாக அவர் உருவாக்கிய அடையாளம் என்பதை மீண்டும் நினைவூட்டியிருக்கிறது ஜெயிலர் 2.

மொத்தத்தில், வயது ஒரு தடையல்ல என்பதைத் தனது திரைப்பயணத்தின் மூலம் தொடர்ந்து உணர்த்தி வரும் ரஜினிகாந்த், ஜெயிலர் 2 படத்தின் வசூல் மூலம் மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்திருக்கிறார். 75 வயதிலும் பாக்ஸ் ஆபீஸில் ரஜினியின் மாஸ் தொடர்கிறதா என்ற கேள்விக்கு, இந்த வசூல் ஒரு வலுவான பதிலாக அமைந்திருக்கிறது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here