Home அரசியல் திமுக மேடையில் விஜய் குறித்த நாராச பேச்சு.. குலுங்கிச் சிரித்த பிரியா… மௌனம் காத்த கனிமொழி?...

திமுக மேடையில் விஜய் குறித்த நாராச பேச்சு.. குலுங்கிச் சிரித்த பிரியா… மௌனம் காத்த கனிமொழி? கிளம்பிய சர்ச்சை! – Kumudam

0


கடந்த அக்டோபர் 18-ம் தேதி சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், திமுக எம்.பி. கனிமொழி, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது மேடையில் பேசிய திமுக பெண் நிர்வாகி ஒருவர், முதலமைச்சர் விஜய்யின் வயதையும், சட்டப்பேரவையில் அவர் தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்துகளையும் குறிப்பிட்டு ஒருமையில் பேசினார். 

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் வயதைச் சுட்டிக்காட்டிப் பேசிய அந்த நிர்வாகி, விஜய்யையும் தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்தார். இந்தப் பேச்சு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அரசியல் களத்தில் விவாதம் வெடித்துள்ளது.

மேடையில் பிரியா சிரிப்பு… கனிமொழி மௌனம்? கிளம்பிய சர்ச்சை!

பொதுக்கூட்ட மேடையில் திமுக பெண் நிர்வாகி பேசியபோது, அருகில் அமர்ந்திருந்த சென்னை மேயர் பிரியா சிரித்த நிலையில், கனிமொழி எம்.பி. அந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார். 

இந்த நிலையில், திமுகவின் மூத்த நிர்வாகியான கனிமொழியே இத்தகைய பேச்சுக்கு ஆதரவு தெரிவிக்கிறாரா என்ன? ஏன் அந்த நிர்வாகியின் பேச்சைக் கண்டிக்காமல் மௌனம் காத்தார்? என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

முதலமைச்சரை விமர்சிப்பதற்கும், தனிப்பட்ட முறையில் அவமதிக்கும் வகையில் பேசுவதற்கும் வித்தியாசம் இருப்பதாகக் கூறும் தவெகவினர், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்கு அரசியல் மேடையில் உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

“இது என்ன அரசியல் பண்பாடு?” – அமைச்சர் கீர்த்தனா கண்டனம்!

இந்த விவகாரத்தில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளப் பதிவில், திமுக பெண் நிர்வாகியின் பேச்சையும், மேடையில் இருந்த கனிமொழி மற்றும் மேயர் பிரியாவின் செயல்பாடுகளையும் அவர் விமர்சித்துள்ளார்.

அமைச்சர் கீர்த்தனா தனது பதிவில், முதலமைச்சர் விஜய் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதைச் சுட்டிக்காட்டியதுடன், அவரைத் தரக்குறைவாகப் பேசுவது எந்த வகையான அரசியல் பண்பாடு என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், அரசியல் மேடைகளில் பெண்களை இழிவுபடுத்தும் பேச்சுகளுக்கு எதிராகத் திமுக தரப்பிலிருந்து உரிய கண்டனங்கள் தெரிவிக்கப்பட வேண்டிய நிலையில், தற்போது முதலமைச்சர் விஜயை குறிவைத்து இத்தகைய பேச்சு எழுந்திருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

கனிமொழி, மேயர் பிரியாவுக்கு நேரடிக் கேள்வி!

தனது பதிவில் கனிமொழி எம்.பி. மற்றும் சென்னை மேயர் பிரியாவை நேரடியாகக் குறிப்பிட்டுள்ள அமைச்சர் கீர்த்தனா, அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

“ஒரு பெண்ணாக அரசியல் மேடையில் நிற்பது மட்டும் பெருமையல்ல. பொதுவாழ்வில் கண்ணியத்தையும் பொறுப்பையும் காப்பதில்தான் பெண்களின் உண்மையான பெருமை இருக்கிறது” என்ற கருத்தை முன்வைத்துள்ள அவர், அரசியலில் பெண்கள் கண்ணியத்துடன் நடந்துகொள்வதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், அரசியல் விமர்சனங்கள் தனிநபர் அவமதிப்பாக மாறுவது ஆரோக்கியமான அரசியல் சூழலுக்கு உகந்ததல்ல என்றும், இதுபோன்ற பேச்சுகளை மக்கள் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

தேர்தல் அரசியலில் மீண்டும் வார்த்தைப் போர்!

தேர்தலுக்குப் பிறகு தவெகவும் திமுகவும் இடையே விமர்சனங்கள் தீவிரமடைந்து வரும் சூழலில், இந்தச் சம்பவம் இரு கட்சிகளுக்கும் இடையிலான மோதலை மேலும் அதிகரித்துள்ளது.

ஒருபுறம், திமுக பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் குறித்துப் பேசப்பட்ட விதம் சர்ச்சையாகியிருக்கிறது. மறுபுறம், அந்தப் பேச்சுக்கு மேடையில் இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. இதற்குத் தவெக அமைச்சர் கீர்த்தனா அளித்துள்ள பதில், அரசியல் விவாதத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்றுள்ளது.

அரசியலில் கருத்து மோதல்கள் தவிர்க்க முடியாதவைதான். ஆனால், விமர்சனங்கள் தனிப்பட்ட அவமதிப்புகளாக மாறும்போது, அரசியல் நாகரிகம் குறித்த கேள்விகளும் எழுகின்றன. இந்த விவகாரத்தில் திமுக தரப்பிலிருந்து விளக்கம் வருமா, அல்லது இரு கட்சிகளுக்கும் இடையிலான வார்த்தைப் போர் மேலும் தீவிரமடையுமா என்பதுதான் இப்போது அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பாக உள்ளது.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version