Home அரசியல் “திருட்டு***… என்ன ம*ரு?”…ஆவேசத்தில் ஆபாசப் பேச்சு.. வைரலாகும் தவெக எம்.எல்.ஏ வீடியோ..! – Kumudam

“திருட்டு***… என்ன ம*ரு?”…ஆவேசத்தில் ஆபாசப் பேச்சு.. வைரலாகும் தவெக எம்.எல்.ஏ வீடியோ..! – Kumudam

0


சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதி தவெக எம்.எல்.ஏ-வாக இருப்பவர் சிவக்குமார். இவர் நேற்று பிற்பகல் சேலம் கன்னங்குறிச்சி அருகே உள்ள மாநகராட்சியின் 8-வது வார்டு பகுதிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அப்போது, அந்தப் பகுதியில் சிலர் புதிதாக நிலம் வாங்கி வீடு கட்டுவதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிகிறது. வீட்டைச் சுற்றி சாக்கடை அமைத்து, அதன் மேல் சிமெண்ட் தளம் அமைக்கும் பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

இந்தப் பணிகளைப் பார்த்த எம்.எல்.ஏ சிவக்குமார், அங்கு சென்று பணியை உடனடியாக நிறுத்துமாறு கூறியதாகச் சொல்லப்படுகிறது. மேலும், மாநகராட்சி கமிஷனரிடம் ஏற்கெனவே பேசியிருப்பதாகக் கூறி, “எதற்காக இப்போது வேலை செய்கிறீர்கள்?” எனக் கேட்டு அங்கிருந்தவர்களிடம் கடுமையாகப் பேசியதாகவும் கூறப்படுகிறது.

ஒருகட்டத்தில் ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தி மிரட்டும் வகையில் அவர் பேசியதாகக் கூறப்படும் காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. இதையடுத்து அங்கு சாக்கடைப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் வேலையை பாதியிலேயே விட்டுவிட்டு அங்கிருந்து சென்றதாகத் தெரிகிறது.

மேலும், அமைக்கப்பட்ட சாக்கடையை பெயர்த்து எடுக்கவும் எம்.எல்.ஏ உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்த நிலையில், தற்போது அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

“மக்கள் பிரதிநிதி பொதுமக்களிடம் இப்படித்தான் பேசுவதா?” என்ற விமர்சனங்களும், “அனுமதி இல்லாமல் கட்டுமானப் பணி நடந்திருந்தால் அதைத் தடுக்க அதிகாரிகளிடம் புகார் அளிப்பதே முறையான நடைமுறை” என்ற கருத்துகளும் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன.

அதேநேரம், அந்தப் பகுதியில் சாக்கடை அமைக்கும் பணிக்கு உரிய அனுமதி இருந்ததா, எம்.எல்.ஏ நேரடியாக தலையிட்டு பணியை நிறுத்தச் சொன்னதற்கான முழுமையான பின்னணி என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

ஆனால், சாக்கடை கட்டிய இடத்தில் வெடித்த எம்.எல்.ஏ-வின் கோபம்… அதுவும் ஆபாச வார்த்தைகளுடன்.. என்ற வகையில் இந்த வீடியோ தற்போது சேலம் அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version