back to top
17 C
London
Thursday, October 15, 2026
No menu items!
Homeஅரசியல்சிஜேபி நோக்கி காய் நகர்த்தும் திமுக.. கவனம் பெரும் மு.க.ஸ்டாலின் பதிவு! - Kumudam

சிஜேபி நோக்கி காய் நகர்த்தும் திமுக.. கவனம் பெரும் மு.க.ஸ்டாலின் பதிவு! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காக்ரோச் ஜனதா கட்சி (CJP) நிர்வாகிகளைக் கைது செய்துள்ள நடவடிக்கைக்குத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, காக்ரோச் ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கடந்த 11 ஆம் தேதி அன்று போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது கைது செய்யப்பட்ட அபிஜீத் தீப்கே, சௌரவ் தாஸ் மற்றும் அஷூதோஷ் ரங்கா உள்ளிட்டோரை நீதிமன்றம் நிபந்தனைகளுடன் விடுதலை செய்தது. இதனைத் தொடர்ந்து, ஜந்தர் மந்தர் பகுதியில் இனி போராட்டங்கள் நடத்த அனுமதியில்லை என்றும், அது தடை செய்யப்பட்ட பகுதி என்றும் டெல்லி காவல்துறை அறிவிப்பு வெளியிட்டது.

காவல்துறையின் தடையை மீறி, சிஜேபி நிர்வாகிகளான சௌரவ் தாஸ் மற்றும் அஷூதோஷ் ரங்கா ஆகியோர் இன்று ஜந்தர் மந்தர் பகுதிக்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் அங்கு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அவர்களைக் கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இருவரையும் ஐந்து நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.

இந்த நிலையில் சிஜேபி நிர்வாகிகளின் கைது நடவடிக்கைக்கு திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்த அரசு எத்தனை போராட்டக்காரர்களைக் கைது செய்ய முடியும்? பாஜகவால் எத்தனை இளைய தலைமுறையினரின் குரல்களை ஒடுக்க முடியும்?

அவர்கள் எவ்வளவு இளைஞர்களைச் சிறையில் அடைக்கிறார்களோ, அவ்வளவுக்கு எந்தவொரு அரசியல் பின்னணியும் இல்லாத சாதாரண குடிமக்கள் வீதிகளுக்கு வந்து மக்களின் உண்மையான பலத்தைக் காட்டுவார்கள்.

ஆசுதோஷ் ரங்கா மற்றும் சௌரவ் தாஸுக்கு எனது ஒருமைப்பாடு. அவர்களுக்குத் தேவையான அனைத்து சட்டப் பிரதிநிதித்துவத்தையும் ஆதரவையும் வழங்க திமுக தயாராக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை ராஜினாமா செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைது செய்யப்பட்டார். ஆனால், சிஜேபி நிர்வாகிகள் கைதுக்கு குரல் எழுப்பிய ஸ்டாலின், ராகுல் காந்தி கைதுக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலக்கியதே ஆகும். 

மேலும், பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத மூன்றாவது கூட்டணியை திமுக உருவாக்க முயற்சி செய்து வருவதாக கூறப்படும் நிலையில், சிஜேபிக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் குரல் கொடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் உற்றுநோக்கப்படுகிறது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here