back to top
17 C
London
Thursday, October 15, 2026
No menu items!
Homeதமிழ்நாடு"திமுக ஒரு தீய சக்தி..கொளத்தூரில் கொத்து புரோட்டா..ஸ்டாலின் அங்கிள்"... அரசு பேருந்தில் சர்ச்சை வசனங்கள்..! -...

“திமுக ஒரு தீய சக்தி..கொளத்தூரில் கொத்து புரோட்டா..ஸ்டாலின் அங்கிள்”… அரசு பேருந்தில் சர்ச்சை வசனங்கள்..! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


புதுச்சேரியில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற தமிழ்நாடு அரசுப் பேருந்தின் பின்புற எல்இடி திரையில், வழக்கமாக ஊர் பெயர்கள் இடம்பெறும் இடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினை விமர்சிக்கும் வாசகங்கள் இடம்பெற்றுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக அரசுப் பேருந்துகளின் பின்புற எல்இடி திரைகளில் பேருந்து செல்லும் ஊர்களின் பெயர்கள் இடம்பெறுவது வழக்கம். ஆனால், சம்பந்தப்பட்ட பேருந்தின் எல்இடி திரையில், “ஓம் சக்தி பராசக்தி”, “திமுக ஒரு தீய சக்தி”, “கொளத்தூரில் கொத்து புரோட்டா”, “ஸ்டாலின் அங்கிள், உங்க அப்பாவையே காணோம்”, “கக்கூஸ் லீடர் உதயநிதி” உள்ளிட்ட திமுக தலைவர்களை விமர்சிக்கும் வாசகங்கள் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதலமைச்சருமான விஜய், தனது தேர்தல் பிரசாரத்தின்போது திமுகவை விமர்சிக்க இதுபோன்ற வாசகங்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் நிலையில், தற்போது அரசுப் பேருந்தின் எல்இடி திரையிலும் அதேபோன்ற வாசகங்கள் இடம்பெற்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போதும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சிக்கும் வகையில் முதலமைச்சர் விஜய் பேசியிருந்தார். அப்போது, “கொளத்தூரில் கொத்து புரோட்டா போட்டாச்சுல” என்ற வாசகத்தையும் அவர் பயன்படுத்தியிருந்தார்.

இந்தச் சூழலில், அரசுப் பேருந்தில் பயணிகளுக்குத் தகவல் தெரிவிக்கப் பயன்படுத்தப்படும் எல்இடி திரையில் அரசியல் விமர்சன வாசகங்கள் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான பேருந்தில் இத்தகைய வாசகங்கள் எவ்வாறு இடம்பெற்றன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

யாருடைய வேலை? பின்னணியில் என்ன?

அரசுப் பேருந்தின் எல்இடி திரையில் இத்தகைய வாசகங்கள் இடம்பெற்றது தற்செயலானதா அல்லது திட்டமிட்டு செய்யப்பட்ட செயலா என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டு வருகின்றன. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள், எல்இடி திரையில் வாசகங்களை மாற்றியது யார் என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

இருப்பினும், இந்தச் சம்பவத்தின் பின்னணி குறித்தும், வாசகங்களை மாற்றியவர்கள் யார் என்பது குறித்தும் இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பாக அதிகாரப்பூர்வ விளக்கம் அல்லது விசாரணை விவரங்கள் வெளியாகும் பட்சத்தில்தான் இதன் பின்னணி குறித்த தெளிவு கிடைக்கும்.

https://youtube.com/shorts/w6C9bFCL6UY?si=eTcBNRLBZNo2C2Vf

 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here