Home அரசியல் “சாதாரண வெற்றியல்ல… சரித்திர வெற்றி!” – சத்யபாமா, மரகதம் குமரவேல் பெருமிதம்! – Kumudam

“சாதாரண வெற்றியல்ல… சரித்திர வெற்றி!” – சத்யபாமா, மரகதம் குமரவேல் பெருமிதம்! – Kumudam

0


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், சத்யபாமா ஆகிய இருவரும், அதிமுகவில் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாகத் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

இதையடுத்து காலியான தொகுதிகளில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, அக். 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அக். 9-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த இடைத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் பொ. சத்யபாமாவும் போட்டியிட்டனர்.

தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் பொ. சத்யபாமா, திமுக சார்பில் சௌ. சுகன்யா, அதிமுக சார்பில் க. பானுமதி, நாம் தமிழர் கட்சி சார்பில் மு. கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பா. லட்சுமணன் உள்ளிட்ட 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இத்தொகுதியில் 80.25 சதவீத வாக்குகள் பதிவாகின. மொத்தம் உள்ள 2,23,306 வாக்காளர்களில் 1,79,214 பேர் வாக்களித்தனர். இதில் தவெக வேட்பாளர் சத்யபாமா வெற்றி பெற்றார்.

அதேபோல், மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 74,048 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பரந்தாமன் 54,008 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் 47,450 வாக்குகளும் பெற்றனர். தொடக்கம் முதலே முன்னிலையில் இருந்த மரகதம் குமரவேல், 27 சுற்றுகளின் முடிவில் 20,040 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் அவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அறையில், அவரது முன்னிலையில் மரகதம் குமரவேலும் சத்யபாமாவும் எம்எல்ஏக்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். இருவரும் தங்களது வெற்றிச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்தனர்.

இதையடுத்து, இருவருக்கும் ஜே.சி.டி. பிரபாகர் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். பதவியேற்ற பின்னர் இருவரும் பதிவேட்டில் கையெழுத்திட்டனர்.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version