Home தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கேக் விருந்து….ரூ.9.27 கோடி ஒதுக்கிய தமிழ்நாடு அரசு! – Kumudam

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கேக் விருந்து….ரூ.9.27 கோடி ஒதுக்கிய தமிழ்நாடு அரசு! – Kumudam

0


அரசுப் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் 61.84 லட்சம் மாணவர்களுக்கு குழந்தைகள் தினத்தன்று கேக் வழங்க தமிழ்நடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக ரூ.9.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, டெண்டர் கோரப்பட்டுள்ளது.

இதன்படி 61.84 லட்சம் மாணவர்களுக்கு கேக் வழங்க, தகுதியான நிறுவனங்கள் டெண்டர் கோரி விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக -ரூ.9.27 கோடி ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்கும் திட்டத்திற்காக 15 கிராம் எடையுள்ள 61.84 வட்சம் ஸ்பாஞ்ச் கேக் துண்டுகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன.

ஒப்பந்தப்புள்ளி…

இதற்காக, மாநிலம் முழுவதும் விநியோக மற்றும் விற்பனை வலையமைப்பைக் கொண்ட, நன்கு அறியப்பட்ட கேக் தயாரிப்பு நிறுவனங்கள் ஒப்பந்தப்புள்ளிகளை அளிக்கலாம்.

அனைத்து கேக் தொகுப்புகளும், சரக்கு போக்குவரத்துக் கட்டணம், போக்குவரத்துக் காலக் காப்பீடு, இறக்குதல் மற்றும் கிடங்குகளில் அடுக்கி வைப்பது உள்ளிட்ட அனைத்துச் செலவுகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் தடை செய்யப்பட்ட நிறமூட்டும் பொருட்கள் முற்றிலும் இல்லாததாக இருக்க வேண்டும். அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள் ஒவ்வொரு சுவையிலும் சாம்பிள் கேக் கொடுத்து தரச் சான்றிதழ் பெற வேண்டும். இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.

 

4 வகை சுவைகளில்….

டெண்டர் விதிமுறைகளின்படி கேக் விநியோக உரிமம் பெறும் நிறுவனங்கள் 4 வகை சுவைகளில் கேக் வழங்க வேண்டும். இவை உடனடியாக உண்ணக்கூடிய, ஸ்பாஞ்ச் வகை கேக் துண்டுகளாக இருக்க வேண்டும்.

  • கலப்பு பழங்கள் / டுட்டி ஃப்ரூட்டி ஸ்பாஞ்ச் கேக்
  • வழக்கமான வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்.
  • செறிவான சாக்லேட் ஸ்பாஞ்ச் கேக்.
  • வெண்ணெய் / பால் ஸ்பாஞ்ச் கேக்.
  • இதெல்லாம் கட்டாயம்…
  • ஒவ்வொரு மாணவருக்கும் 45 கிராம் எடையில், தனித்தனி கவரில் காற்று புகாத வகையில் பேக் செய்யப்பட்ட கேக் வழங்க வேண்டும்.
  • ஒவ்வொரு கவரிலும் பிராண்ட் பெயர். சுவை, அளவு எஃப்எஸ்எஸ்ஏஐ எண், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி மற்றும் அரசின் லோகோ இடம்பெற வேண்டும்.
  • குழந்தைகள் தினமான நவ. 14-ம் தேதி மாணவர்களுக்கு கேக் வழங்கப்பட உள்ளதால், இந்த நாளில் இருந்து 30 நாட்களுக்கு கெடாமல் இருக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version